முத்திரைத்தாள் வாங்கும் முன் இந்த புதிய விதிகளை தெரிந்துகொள்ளுங்கள்!

புதிய விதிகளின்படி, முத்திரைத்தாள் வாங்க விரும்புவோர் நேரில் சென்று தான் வாங்க வேண்டும், மூன்றாம் நபர் மூலம் இனிமேல் வாங்க முடியாது.  

Written by - RK Spark | Last Updated : Apr 5, 2023, 11:14 AM IST
  • மூன்றாம் நபர் மூலம் இனிமேல் முத்திரைத்தாளை வாங்க முடியாது.
  • முத்திரைத்தாள் விதி குறித்த சுற்றறிக்கை பிப்ரவரி 1-ம் தேதி வெளியிடப்பட்டது.
  • முத்திரைத்தாள் வாங்க விரும்புவோர் நேரில் சென்று தான் வாங்க வேண்டும்.
முத்திரைத்தாள் வாங்கும் முன் இந்த புதிய விதிகளை தெரிந்துகொள்ளுங்கள்! title=

புதிய நிதியாண்டு ஏப்ரல் 1ம் தொடங்கியது முதல் பல துறைகளின் விதிகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  அந்த வகையில் தற்போது முத்திரைத்தாள் வாங்குவதிலும் சில புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது முத்திரைத்தாள் வாங்க விரும்புவோர் நேரில் சென்று தான் வாங்க வேண்டும், மூன்றாம் நபர் மூலம் இனிமேல் வாங்க முடியாது.  புதிய உத்தரவின்படி, விற்பனையாளரிடமிருந்து முத்திரைத்தாளை வாங்க ஒரு நபர் நேரடியாக செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  இதற்கான சுற்றறிக்கை பிப்ரவரி 1-ம் தேதி வெளியிடப்பட்டது, முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் இந்த முடிவை எதிர்த்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதுவரை முத்திரைத்தாள் வேண்டுமென்றால் யார் வேண்டுமானாலும் போயி வாங்கிக்கொள்ளலாம், தேவைப்படும் நபர் தான் போக வேண்டும் என்பது கிடையாது.

மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... அடிப்படை ஊதியத்தில் அதிரடி ஏற்றம் விரைவில், கணக்கீடு இதோ!!

stamp

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள முத்திரைத்தாள் விதிகளின்படி, சாமானிய குடிமக்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் நேரில் சென்று தான் முத்திரைகளை வாங்க வேண்டும்.  ஸ்டாம்ப் டீலர்கள் சங்கத்தின் தலைவர் அசோக் ஆர் கடம் கூறுகையில்,  முத்திரைத்தாள் குறித்து உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிகள் முத்திரைச் சட்டத்தின் வரம்பிற்குள் வரவில்லை என்று கூறியுள்ளார்.  மேலும் ஆன்லைனில் முத்திரைத்தாள் விற்பனை செய்வதற்கும் உரிமம் வைத்திருப்பவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அதைத் தனியாருக்கு எதிராக முழு நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் கூறியுள்ளார். 

மும்பை உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, தற்போதைய விதியின்படி ஒரு நபர் அல்லது நிறுவனம் முத்திரைதாள்களை வாங்கும்போது மற்றொரு நபர் மூலம் வாங்கிக்கொள்ளலாம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.  இப்போது உத்தரவில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது, அதாவது உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிகள் உரிமம் வைத்திருப்பவரின் பணிக்கு முரணானவை என்றும், தவறான முறையில் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஆற்றில் இருந்து தங்கமா? நம்பவே முடியாத அதிசய ஆறுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News