மூத்த குடிமக்களுக்கு இலவச விமானப் பயணம்: நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வசதிகள் தற்போது அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி மூத்த குடிமக்களுக்கு ரயில்வே மற்றும் வங்கிகள் வரை பல பணிகளில் அரசிடமிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அத்தகைய வசதியைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம், இதன் கீழ் இனி மூத்த குடிமக்கள் இலவசமாக விமானத்தில் பயணம் செய்ய முடியும். அந்த வகையில் ரயில்வே வழங்கிய சலுகைக்குப் பிறகு, தற்போது விமானத்திலும் இலவசப் பயணம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வசதியை மாநில அரசு தொடங்கியுள்ளது
இந்த நிலையில் தற்போது மத்திய அரசுடன், மாநில அரசும் பல வகையான வசதிகளை வழங்கி வருகின்றது. அதன்படி மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வசதியை தொடங்கி வைத்தார், அதில் அவர்கள் விமானத்தில் பயணம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | வாவ்..ரயில் பயணிகளுக்காக புதிய சேவையா? கட்டாயம் தெரிஞ்சிகோங்க 


அரசின் முழு செலவில் பயணம் செய்யலாம்
இந்த தீர்த்த தரிசன திட்டத்தில் பல இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புனித ரவிதாஸ் பிறந்த இடமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தீர்த்த தரிசனம் யோஜனா திட்டத்தின் கீழ், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அரசின் முழு செலவில் யாத்திரை ஸ்தலங்களுக்கு செல்லலாம்.


மாநில அரசு மேம்படுத்தி வருகிறது
இதனுடன், மாநில முதல்வர் தகவல் தெரிவிக்கையில், தற்போது பிண்டில் நகராட்சி கவுன்சில் உள்ளது. இதனை நகராட்சியாக தரம் உயர்த்தும் பணியை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இத்துடன் நகருக்கு மருத்துவக் கல்லூரியும் கிடைக்கும். 'விகாஸ் யாத்ரா' மாநிலத்தின் அனைத்து வார்டுகள் மற்றும் கிராமங்களுக்குச் சென்று தகுதியுள்ள மக்களுக்கு அரசின் திட்டங்களின் பலன்களை வழங்கும் என்றும், அதே நேரத்தில் வளர்ச்சித் திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.


மேலும் படிக்க | விரைவில் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புக்கான தேர்வு நுழைவுச் சீட்டு! எப்படி பதிவிறக்கம் செய்வது? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ