7th pay commission: அடி தூள்... 50% டிஏ, அடிப்படை ஊதியத்தில் எக்கச்சக்க ஏற்றம்
7th pay commission: பணவீக்கம் அதிகரிக்கும் போது, கொடுப்பனவும் அதே விகிதத்தில் அதிகரிக்கிறது. இதனால், ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படுகின்றது.
7 ஆவது ஊதியக்குழு சமீபத்திய அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி அதிகரிக்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏனெனில், பணவீக்கம் அதிகரிக்கும் போது, கொடுப்பனவும் அதே விகிதத்தில் அதிகரிக்கிறது. இதனால், ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படுகின்றது. இதற்கு, அகவிலைப்படியின் கணக்கீட்டைப் புரிந்துகொள்வது அவசியம். ஊழியர்களின் சம்பளத்தில் பல கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று ஃபிட்மெண்ட்ட் ஃபாக்டர், மற்றொன்று அப்ரெய்சல் எனப்படும் பணி மதிப்பீடு. இந்த இரண்டின் அடிப்படையில் அடிப்படை சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது. ஏனெனில், ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரித்தால் சம்பளம் தானாகவே அதிகரிக்கும். அதே சமயம், மதிப்பீடு நன்றாக இருந்தால், சம்பள திருத்தமும் இருக்கும். ஆனால், ஃபிட்மென்ட் பேக்டர் மற்றும் அப்ரைசல் இல்லாமல் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மிகப்பெரிய உயர்வு ஏற்படப் போகிறது என்பது புதிய செய்தி.
அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படுகிறது
அடிப்படை சம்பளத்தில் எப்படி மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும்? இதற்கு சிறிய ஃப்ளாஷ்பேக் தேவை. 2016 ஆம் ஆண்டு 7வது ஊதியக் குழுவை அரசு அமல்படுத்தியபோது, அகவிலைப்படி பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது. கணக்கீட்டிற்கு புதிய அடிப்படை ஆண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜிய அகவிலைப்படியின் காரணமாக, முந்தைய அகவிலைப்படி ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்பட்ட பலன் கிடைத்தது. இப்போது மீண்டும் அதுபோன்ற ஒன்று நடக்கப் போகிறது. அகவிலைப்படியை அடிப்படைச் சம்பளத்துடன் இணைத்து மீண்டும் ஒருமுறை சம்பளத்தை உயர்த்தும் திட்டம் உள்ளது. அதன் பின்னர் அகவிலைப்படி பூஜ்ஜியமாகிவிடும்.
அகவிலைப்படி எதற்காக பூஜ்ஜியம் ஆக்கப்படும்?
இப்போது, அகவிலைப்படி எதற்காக பூஜ்ஜியம் ஆக்கப்படும்? என்ற கேள்வி எழுகிறது. 2016 ஆம் ஆண்டின் குறிப்பாணையில், அகவிலைப்படி (DA) 50% அதாவது அடிப்படை சம்பளத்தில் 50% ஆகும்போது, அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அகவிலைப்படி பூஜ்ஜியமான பிறகு, இப்போது 42 சதவீத அகவிலைப்படி கிடைப்பது போல, மீண்டும் அகவிலைப்படியின் சதவிகிதம் 1, 2 என்ற முறையில் தொடங்கும். அகவிலைப்படி 50 சதவீதத்தை அடைந்தவுடன், அது அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும்.
இதன்மூலம், ஊழியர்கள் தங்களது சம்பள திருத்தத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. முன்பு அகவிலைப்படி 100 சதவீதத்தையும் தாண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆறாவது ஊதியக்குழுவில் இந்த சூத்திரம் அமைக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்?
தற்போது, பே-பேண்ட் லெவல்-1 அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ. 18,000 ஆக உள்ளது. இது குறைந்தபட்ச அடிப்படை சம்பளம். ஆனால், இதே கணக்கீட்டை 50% அகவிலைப்படியில் பார்த்தால், ஊழியர்களுக்கு 9,000 ரூபாய் கிடைக்கும். அகவிலைப்படி 50 சதவீதம் ஆனவுடன் அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டு அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். அதாவது ரூ.18,000 சம்பளம் ரூ.9,000 அதிகரித்து ரூ.27,000 -ஐ எட்டும். இதற்குப் பிறகு, அகவிலைப்படி ரூ.27,000 -இல் கணக்கிடப்படும். டிஏ 0 ஆன பிறகு, அது 3 சதவீதம் அதிகரித்தால், அவர்களது சம்பளத்தில் மாதம் 810 ரூபாய் அதிகரிக்கும்.
அடிப்படை ஊதியம் ரூ.9,000 எப்போது வரை உயரும்?
தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதமாக உள்ளது. இப்போது அடுத்த திருத்தம் ஜூலை 2023 இல் நடைபெற உள்ளது, இதில் 4 சதவீதம் அதிகரிக்கலாம். அதாவது ஜூலை மாதத்திற்கு பிறகு அகவிலைப்படி 46 சதவீதம் அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஜனவரி 2024 -க்கான அகவிலைப்படியின் திருத்தம் கண்காணிக்கப்பட வேண்டும். இதுவும் 4 சதவீதம் அதிகரித்தால், அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும். 3 சதவீதம் அதிகரித்தால், 49 சதவீதமாக இருக்கும். 4 சதவிகிதம் அதிகரித்து அகவிலைப்படி 50% ஆனால், 2024 ஜனவரி முதல் அகவிலைப்படி பூஜ்ஜியமாகிவிடும். அதாவது ஜூலை 2024 முதல், அகவிலைப்படி உயர்த்தப்பட்ட அடிப்படை சம்பளத்திலேயே கணக்கிடப்படும். 49 சதவீதம் இருந்தால், ஜூலை 2024 வரை காத்திருக்க வேண்டும்.
அகவிலைப்படி மீண்டும் 4 சதவீதம் அதிகரிக்கும்
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ உயர்வு) மார்ச் மாதத்தில் 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. இது ஜனவரி 2023 முதல் அமலுக்கு வந்தது. இப்போது அடுத்த அகவிலைப்படி ஜூலை 2023 முதல் அறிவிக்கப்பட உள்ளது. இதிலும் 4 சதவீதம் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் மற்றும் தற்போது வரை பெறப்பட்டுள்ள இரண்டு மாதங்களுக்கான CPI-IW புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை வைத்து பார்த்தால், ஜூலை 2023 -லும் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என்பது தெளிவாக இருப்பதாக வல்லுநர்கள் கருதுகிறார்கள். அதாவது ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 46% ஆக உயரக்கூடும்.
அகவிலைப்படி ஏன் பூஜ்ஜியமாக்கப்படும்?
புதிய ஊதியக் குழு நடைமுறைப்படுத்தப்படும் போதெல்லாம், ஊழியர்கள் பெறும் டிஏ அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படுகிறது. விதிப்படி, ஊழியர்கள் பெறும் 100% டிஏவை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர், ஆனால் இது சாத்தியமில்லை. நிதி நிலை இதன் குறுக்கே வரும். இருப்பினும், இது 2016 இல் செய்யப்பட்டது. அதற்கு முன், 2006ல், ஆறாவது ஊதியக்குழு வந்த போது, ஐந்தாவது ஊதியக் குழுவில், டிசம்பர் வரை, 187 சதவீதம் டிஏ பெறப்பட்டு வந்தது. முழு அகவிலைப்படியும் அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டது. எனவே 6வது ஊதிய விகிதத்தின் குணகம் 1.87 ஆக இருந்தது. பின்னர் புதிய ஊதியக்குழு மற்றும் புதிய தர ஊதியமும் உருவாக்கப்பட்டது. ஆனால், அதை வழங்க மூன்று ஆண்டுகள் ஆனது.
மேலும் படிக்க | 7th Pay Commission மாஸ் செய்தி: விரைவில் பம்பர் சம்பள ஏற்றம்... இதுதான் காரணம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ