தற்போது குளிர்காலம் தொடங்கி உள்ளது. இந்த சமயத்தில் ஊறுகாய் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். ஊறுகாயின் காரமான மற்றும் இனிப்பு-புளிப்பு சுவை அனைவரையும் ஈர்க்கிறது. ஊறுகாய் ஒவ்வொரு உணவையும் அதிக சுவையாக்குகிறது. இந்த சீசனில் ஊறுகாய் சாப்பிடுவது சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது. அதனால்தான் ஊறுகாய்களைஇந்த சமயத்தில் அதிகம் வாங்கி வைத்திருப்பார்கள். ஆனால் அவற்றை சேமிப்பதற்கான சிறந்த வழி உங்களுக்குத் தெரியாவிட்டால் எளிதில் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிறைய பேர் ஊறுகாயை சாப்பிடுவதை விரும்புகின்றனர், ஆனால் அவற்றை புதியதாக வைத்திருப்பதற்கான வழிகளை தெரிந்து வைத்திருப்பதில்லை. ஊறுகாயை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டுமா அல்லது வெளியில் வைக்க வேண்டுமா என்று கேள்வி அனைவருக்கும் இருக்கலாம். உங்களிடம் இந்த கேள்விகள் இருந்தால், அதற்கான விடையை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ஊறுகாயை சுவையாகவும், புதிதாகவும் வைத்திருப்பது பற்றிய சில குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | ஒல்லி பெல்லி உடம்பு வேண்டுமா? தினமும் இந்த பானங்களை குடித்தால் போதும்


ஊறுகாயை எப்படி சேமிப்பது?


பொதுவாக எந்த ஒரு உணவையும் கெட்டுப்போகாமல் வைத்திருக்க பிரிட்ஜ் உதவுகிறது. பிரிட்ஜ் உணவை புதியதாக வைத்திருக்கும், ஆனால் ஊறுகாயை குளிர்சாதன பெட்டியில் சேமிக்க முடியுமா?. ஊறுகாயில் என்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் அவற்றை எவ்வளவு நாள் சேமிக்க விரும்புகிறீர்கள் என்பதை பொறுத்து பிரிட்ஜில் வைக்கலாம். ஊறுகாயில் குறைவான எண்ணெய் அல்லது மசாலா இருந்தால், அவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கலாம். மேலும், பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஊறுகாய்களை ஃப்ரிட்ஜில் வைக்கலாம். ஆனால், ஊறுகாயை ஓரிரு வாரங்களில் சாப்பிட நினைத்தால் வெளியில் வைக்கலாம்.


ஊறுகாயை வெளியில் வைப்பது ஒரு பொதுவான வழி முறையாகும். இது பல வகையான ஊறுகாய்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. ஆனால் வெளியில் வைப்பதற்கு முன்பு சில முக்கியமான விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் வைத்திருப்பது என்ன வகையான ஊறுகாய், அதில் என்ன என்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது? உங்கள் பகுதி வானிலை எப்படி இருக்கும் என்பதை பொறுத்தது முடிவு செய்ய வேண்டும். கடுகு எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட ஊறுகாயை வெளியில் பாதுகாப்பாக வைத்திருக்கலாம். வானிலை குளிர்ச்சியாக இருந்தால் வெளியில் வைக்கலாம். நீங்கள் ஊறுகாயை வெளியில் வைக்கிறீர்கள் என்றால், காற்று அல்லது தண்ணீர் உள்ளே வராத வகையில் இறுக்கமான பாட்டில்களில் வைக்கவும்.


ஊறுகாயை வெளியில் பாதுகாப்பாக வைப்பது எப்படி?


நீங்கள் ஊறுகாயை அலமாரி போன்ற குளிர் மற்றும் உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்கலாம். ஊறுகாய்கள் புதிதாக இருக்க அதன் மேல் சிறிது எண்ணெய் வைப்பது முக்கியம். நீங்கள் அவற்றை கெட்டுப்போகாமல் பாதுகாக்க விரும்பினால், அவற்றை மாதம் ஒருமுறை வெயிலில் வைக்கலாம்.


ஊறுகாய் சேமிப்பு டிப்ஸ்


ஊறுகாயின் மீது அதே அளவு எண்ணெயை போடவும், அதனால் அவற்றின் சுவை கெட்டுப் போகாது. இது ஊறுகாயை காற்று மற்றும் சிறிய கிருமிகளிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.


ஊறுகாய் ஜாடியை ஒவ்வொரு மாதமும் சில மணி நேரம் வெயிலில் வைக்கவும். இது ஊறுகாய் நீண்ட நாள் புதியதாக இருக்க உதவுகிறது மற்றும் இன்னும் சுவையாக மாற்றுகிறது.


ஜாடியிலிருந்து ஊறுகாயை எடுக்கும்போது எப்போதும் சுத்தமான மற்றும் உலர்ந்த கரண்டியைப் பயன்படுத்தவும். நீங்கள் ஈரமான கரண்டியைப் பயன்படுத்தினால், அது ஊறுகாயை மோசமாக்கும் மற்றும் எளிதில் கெட்டுப்போக செய்யும்.


ஊறுகாயை குளிர்ச்சியான மற்றும் உலர்ந்த இடத்தில் வைக்கவும், சமையலறையில் அதிக வெப்பம் இருந்தால் அங்கு வைக்க வேண்டாம். இதனால கெட்டுப்போக வாய்ப்புள்ளது.


ஊறுகாயை அவ்வப்போது எடுத்து பாருங்கள். அதில் ஏதேனும் வித்தியாசம் தெரிந்தால் உடனே அகற்றவும். கெட்டுப்போன ஊறுகாயை சாப்பிடுவது நல்லது இல்லை.


மேலும் படிக்க | கெட்ட கொழுப்பை வேகமாக குறைக்கும் ஆரோக்கியமான பழங்கள்: பட்டியல் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ