புது டெல்லி: மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் சமூக ஊடகங்கள் மூலம் இன்று (திங்கள்கிழமை) உரையாடினார். அந்த உரையாடலின் போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் மிக முக்கியமான கேள்வி "மீதமுள்ள சிபிஎஸ்இ தேர்வுகள்" எப்போது நடைபெறும் எனக் கேட்கப்பட்டது தான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மீதமுள்ள தேர்வுகள் எப்போது நடைபெறும்?


உரையாடலின் போது ஒரு மாணவர் மீதமுள்ள 10 மற்றும் 12 ஆம் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று கேட்டார். இதற்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சர், தேசிய ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் , நிலைமை இயல்பானவுடன், மீதமுள்ள சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து அட்டவணையை அரசாங்கம் அறிவிக்கும் என்றார். 


முக்கிய பாடங்கள் மட்டுமே சோதிக்கப்படும்


ஊரடங்கு உத்தரவு முடிந்ததும், 10 மற்றும் 12 வகுப்பு அனைத்து தேர்வுகளும் நடைபெறாது என்பது சிபிஎஸ்இ முன்பே தெளிவு படுத்தப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உயர்கல்வி படிக்க மற்றும் சேர்க்கைக்கு தேவையான முக்கிய பாடங்களின் தேர்வு மட்டுமே இருக்கும். இதுபோன்ற 29 பாடங்கள் உள்ளன. மேலும், வெளி மாவட்டங்களில் அமைந்துள்ள மையங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மீதமுள்ள தேர்வுகள் நடைபெறாது என்று வாரியம் அறிவித்துள்ளது.


ஊரடங்கு உத்தரவு காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன:


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்க நாடு முழுவதும் லாக்-டவுன் விதிக்கப்பட்டது. முதல் கட்டமாக இந்த லாக்-டவுன் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையும், பின்னர் மே 3 ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டது. 


இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் போட்டித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ போர்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் சில தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் மாநில வாரியங்கள் பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வகுப்பிற்கு தேர்வு இல்லாமல் உயர்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.