New Space India Limited (NSIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Manager, Chief Manager போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலிப் பணியிட விவரம்:


Chief Manager பணிக்கு 3 பணியிடங்கள்


Deputy Manager பணிக்கு 15 பணியிடங்கள்


Manager பணிக்கு 06 பணியிடங்கள்


Company Secretary பணிக்கு 01 பணியிடம்


Executive Secretary பணிக்கு  01 பணியிடம் என மொத்தமாக 26 பணியிடங்கள் New Space India Limited (NSIL) நிறுவனத்தில் காலியாக உள்ளது.


கல்வித் தகுதி:


இந்த NSIL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electronics, Aerospace, EEE, ECE போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் CA, ICWA, Graduate Degree, BE, B.Tech,  Master Degree, M.Sc, MSW, MBA, M.A, Post Graduation Degree-களில் ஏதேனும் ஒன்றை பெற்றவராக இருக்க வேண்டும்.


வயது வரம்பு:


Chief Manager, Company Secretary பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 27.08.2022 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 48 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 27.08.2022 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும், OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது.


சம்பள விவரம்:


Chief Manager பணிக்கு ரூ.80,000 முதல் ரூ.2,20,000


Deputy Manager பணிக்கு ரூ.50,000 முதல் ரூ.1,60,000


Manager பணிக்கு ரூ.60,000 முதல் ரூ.1,80,000


Company Secretary பணிக்கு ரூ.80,000 முதல் ரூ.2,20,000


Executive Secretary பணிக்கு ரூ.50,000 முதல் ரூ.1,60,000


தேர்வு செய்யப்படும் முறை:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்ப கட்டணம்:


இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
SC / ST / Ex-Serviceman / PWD போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் விதம்:


இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை, விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.nsilindia.co.in/ இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம். பின் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


 மேலும் படிக்க | 7th Pay Commission: ஆகஸ்ட் மாதம் ஊழியர்களுக்கு கிடைக்கும் 4 பம்பர் செய்திகள்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ