Top 5 cars under 5 lakh rupees: கொரோனா தொற்றுநோய் காரணமாக, தனிப்பட்ட போக்குவரத்தின் (Personal Transportation) போக்கு அதிகரித்துள்ளது. மக்கள் இப்போது பொது போக்குவரத்துக்கு பதிலாக அவரவரது வாகனங்களிலேயே பயணிக்க விரும்புகிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் கார்கள் வாங்கப்பட்ட போக்கைப் பார்க்கும்போது, ​​மலிவு விலை கார்களின் பிரிவில் தேவை அதிகரித்துள்ளது என்பது தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரும்பாலான மக்கள் தங்கள் நிதி வரம்புக்குள் சிறந்த செயல்திறன் கொண்ட காரை வாங்க விரும்புகிறார்கள். நீங்களும் ஒரு பட்ஜெட் காரை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கானதுதான். சுமார் 5 லட்சத்துக்குள் அட்டாகாசமாக இயங்கும் 5 கார்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.


மாருதி இக்னிஸ்


இது மாருதி சுசுகியின் (Maruti Suzuki) காம்பாக்ட் கார் ஆகும். இந்த காரின் டெல்லி ஷோரூம் விலை ரூ .4.95 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. புதிய இக்னிசில் பிஎஸ் 5-க்கு இணக்கமான 1.2 லிட்டர் VVT பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 6000 ஆர்பிஎம்மில் 61 கிலோவாட் பவரை உருவாக்குகிறது. இதில் முன்பக்க இரண்டு இருக்கைகளுக்கும் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் ஸ்மார்ட் பிளே மியூசிக் சிஸ்டம், புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பொத்தான் தானியங்கி காலநிலை கட்டுப்பாடு போன்ற அம்சங்கள் உள்ளன.


மாருதி செலிரியோ


இது மாருதியின் ஹேட்ச்பேக் கார் ஆகும். இதன் டெல்லி ஷோரூம் விலை ரூ .4.65 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. செலிரியோ பெட்ரோல் (Petrol) மற்றும் சி.என்.ஜி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோலில் இந்த கார் லிட்டருக்கு 21.63 கி.மீ. மற்றும் சி.என்.ஜி.யில் லிட்டருக்கு 30.47 கி.மீ. மைலேஜ் தருவதாக நிறுவனம் கூறுகிறது. இதில் இரண்டு முன் இருக்கைகளிலும் ஏர்பேக்குகள் உள்ளன. ஆட்டோ கியர் ஷிப்ட் (AGS), மல்டி இன்ஃபோ டிஸ்ப்ளே, ப்ளூடூத் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒருங்கிணைந்த ஆடியோ போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.


ALSO READ: Maruti Suzuki கார் வாங்கப்போறீங்களா? உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி


ஹூண்டாய் சாண்ட்ரோ


ஹூண்டாயின் (Hyundai) ஹேட்ச்பேக் சாண்ட்ரோவும் 5 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த தேர்வாக இருக்கும். நிறுவனத்தின் புதிய சென்ட்ரோவின் டெல்லி ஷோரூம் தொடக்க விலை ரூ .4.73 லட்சம் ஆகும். இது 1.1 லிட்டர் பிஎஸ் 6 இணக்கமான பெட்ரோல் எஞ்சின் கொண்டுள்ளது. இது பின்புற பார்க்கிங் சென்சார்கள், பின்புற பார்க்கிங் கேமரா, வலுவான உடல் அமைப்பைக் கொண்ட இரட்டை முன் ஏர்பேக்குகள் மற்றும் ஈபிடியுடன் ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.


டாடா டியாகோ


டாடாவின் ஹேட்ச்பேக் டியாகோ 5 லட்சம் பட்ஜெட்டில் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இது நாடு முழுவதும் ஒரே ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது.இதன் தொடக்க விலை ரூ .4.99 லட்சம் ஆகும். இது 1.2 லிட்டர் ரெவோட்ரான் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 6000 ஆர்பிஎம்மில் 86 பிஎஸ் சக்தியை உருவாக்குகிறது. இரட்டை முன் ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் கேமரா, ஈபிடி மற்றும் சிஎஸ்சியுடன் ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.


ரெனால்ட் க்விட்


ரெனால்ட் க்விட் ஒரு பட்ஜெட் கார் (Car) ஆகும். இதில் எஞ்சினின் இரு வகைகள் உள்ளன. இவை 0.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் ஆகியவையாகும். இதன்  0.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலின் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலை ரூ .3.32 லட்சம் ஆகும். 1.0 லிட்டர் எஞ்சின் மாடலின் ஆரம்ப விலை ரூ .4.49 லட்சம் ஆகும். பாதுகாப்பைப் பொறுத்தவரை, புதிய ரெனால்ட் க்விட்டில் இரட்டை முன் ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஏபிஎஸ் & ஈபிடி மற்றும் சீட் பெல்ட் நினைவூட்டல் போன்ற அம்சங்கள் உள்ளன. (அனைத்து மாடல்களின் தகவல்களும் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.)


ALSO READ:Cheapest Cars: 3 லட்சத்துக்கும் குறைவான விலையில் கார் வாங்க சூப்பர் வாய்ப்பு!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR