ரூ. 50 ஆயிரத்துக்கு மாருதி Wagon R காரை வாங்கலாம் -முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்

புதிய கார் அல்லது பைக் வாங்க பணம் இல்லாதவர்கள், இரண்டாம் வகை கார்களை (Used car) வாங்கவும் தயாராக உள்ளனர்.

Written by - ZEE Bureau | Last Updated : Jun 11, 2021, 10:45 AM IST
ரூ. 50 ஆயிரத்துக்கு மாருதி Wagon R காரை வாங்கலாம் -முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்

நாட்டில் கொரோனா தொற்றுநோய் பரவத் தொடங்கிய பின்னர் செகண்ட் ஹேண்ட் வாகனங்களின் விற்பனை நல்ல முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. தொற்றுநோய் காரணமாக, மக்கள் தங்கள் சொந்த வாகனம் வாங்குவதில் கவனம் செலுத்துகின்றனர். புதிய கார் அல்லது பைக் வாங்க பணம் இல்லாதவர்கள், இரண்டாம் வகை கார்களை (Used car) வாங்கவும் தயாராக உள்ளனர்.

செகண்ட் ஹேண்ட் வாகனங்களை விற்கும் போர்ட்டல்களில், பயன்படுத்திய வாகனங்களைத் தேடும் பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீங்கள் பயன்படுத்திய காரை வாங்க நினைத்தால், செகண்ட் ஹேண்ட் வாகனங்களை விற்பவர்கள் மாருதி சுசுகியின் ட்ரூவ் வேல்யூ போர்ட்டல் (marutisuzukitruevalue.com) மூலம் ஒரு காரை வாங்கலாம். பயன்படுத்திய கார் குறைந்த பட்ஜெட்டில் உங்களுக்கு கிடைக்கிறது. 

ALSO EAD |  Maruti Suzuki Ertiga: மலிவான 7 இருக்கைகள் கொண்ட சூப்பர் CNG கார் வாங்க செம வாய்ப்பு!

அந்த தளத்தில் உள்ள சில காரின் விவரங்கள்:

1. வேகன் ஆர் விஎக்ஸ்ஐ ( Wagon R VXI) : மாருதி நிறுவனம் 2009 மாடல் வேகன் ஆர் விஎக்ஸ்ஐ விற்கிறது. பெட்ரோல் எஞ்சினுடன் வரும் இந்த கார் ரூ .1,25,000 க்கு விற்பனைக்கு கிடைக்கிறது. 1,46,554 கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளது.

2. வேகன் ஆர் எல்எக்ஸ்ஐ (Wagon R LXI) : இந்த நிறுவனம் 2008 மாடல் வேகன் ஆர் எல்எக்ஸ்ஐ விற்கிறது. பெட்ரோல் எஞ்சினுடன் வரும் இந்த கார் ரூ .1,25,000 க்கு விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த கார் டெல்லியில் விற்பனைக்கு உள்ளது. இதுவரை 91,935 கி.மீ. தூரம் இயக்கப்பட்டு உள்ளது.

3. வேகன் ஆர் எல்எக்ஸ்ஐ (Wagon R LXI) : மாருதி சுசுகி நிறுவனம் 2006 மாடல் வேகன் ஆர் விஎக்ஸ்ஐ விற்கிறது. பெட்ரோல் எஞ்சினுடன் வரும் இந்த கார் ரூ .53,000 க்கு விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த கார் 98,807 கி.மீ. தூரம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

ALSO EAD |  உங்ககிட்ட இந்த கார் இருக்கா? Maruti, Tata Motors, Toyota வாடிக்கையாளர்களுக்கு good news!!

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பான எந்த தகவலும் வலைத்தளத்தின் தகவல்களின்படி கொடுக்கப்பட்டு உள்ளது. பயன்படுத்திய காரை வாங்கும் போது, ​​காரின் ஆவணங்கள் மற்றும் நிலையை நீங்கள் சரிபார்க்கவும். வாகனத்தின் உரிமையாளரை சந்திக்காமல் அல்லது வாகனத்தை சரிபார்க்காமல் ஆன்லைனில் பரிவர்த்தனை செய்ய வேண்டாம். உங்கள் தகவல்களுக்கு, இந்த கார்கள் அனைத்தும் டெல்லி வட்டத்தில் விற்பனைக்கு உள்ளன என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News