மலிவான தங்க கடன்: நாம் அனைவரும் நம் வாழ்வில் ஏதாவது ஒரு சமயத்தில் கடன் வாங்குகிறோம். நம் வாழ்வில் பண நெருக்கடி ஏற்படும்போதும், வாழ்வில் சில முன்னேற்றங்கள் ஏற்படும்போதும், வீடு, கார் போன்றவற்றை வாங்கும்போதும் நாம் கடன் வாங்குவது வழக்கம். மற்ற கடன்களை விட தங்கத்தின் மீது வாங்கும் கடன் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இந்த கடன் ஒரு நபருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் அதிக தொகையை வழங்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்கக் கடன் வாங்குவது எப்படி?


நீங்களும் தங்கக் கடன் வாங்க விரும்பினால், அருகில் உள்ள வங்கிக்குச் சென்று எளிதாக இந்த கடனை பெறலாம். இருப்பினும், இதற்காக நீங்கள் சில செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும்.


பாதுகாப்பான கடன்


வங்கிகள் தங்கத்தின் மீது கடன் கணக்கை வழங்குவதால் தங்கக் கடன் பாதுகாப்பான கடனாகக் கருதப்படுகிறது. அத்தகைய கடனைப் பெறுவதற்கு அதிக நேரம் எடுக்காது. இதற்கான செயல்முறையும் எளிதானது. பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி வங்கிகள் தங்கத்தின் மீதான பணத்தை கடனாக வழங்குகின்றன. இருப்பினும், கடன் வழங்கும் வங்கிகள் தங்கத்தின் தற்போதைய மதிப்பைக் கணக்கிட்ட பின்னரே கடன் தொகையை வழங்குகின்றன. எந்த கடன் வாங்கும்போதும் மலிவான வட்டி விகிதத்திலேயே அந்த கடனை வாங்க நாம் முயற்சிப்போம். அந்த வகையில், மலிவான விகிதங்களில் தங்கக் கடன்களை வழங்கும் ஐந்து வங்கிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


எந்த வங்கிகள் மலிவான தங்கக் கடன்களை வழங்குகின்றன?


- எஸ்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) தங்கத்திற்கு 7.20 சதவிகிதம் முதல் 16.50 சதவிகிதம் வரை வட்டி வசூலிக்கிறது. இதன் செயலாக்க கட்டணம் 1 சதவிகிதம் ஆகும்.


- கோடக் மஹிந்திரா வங்கி தங்கத்திற்கு 8% முதல் 17% வட்டி வசூலிக்கிறது. இந்த வங்கியின் செயலாக்க கட்டணம் 2% + ஜிஎஸ்டி ஆகும்.


- சவுத் இந்தியன் வங்கி 8.25 சதவீதம் முதல் 19 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது.


 - சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 8.45 சதவிகிதம் முதல் 8.55 சதவிகிதம் வரை வட்டி வசூலிக்கிறது. மேலும் கடனில் 0.5 சதவிகிதம் செயலாக்கக் கட்டணமும் உள்ளது.


- பெடரல் வங்கி தங்கக் கடனுக்கு 9.49 சதவீத வட்டி வசூலிக்கிறது.


மேலும் படிக்க | May 1, 2023: மே 1 முதல் பல விதிகளில் மாற்றம், சாமானியர்களுக்கு நேரடி தாக்கம்


தங்கக் கடன் தொகை


அனைத்து வங்கிகளும் தங்கத்தின் மீது கடன் வாங்கும் பயனர்களுக்கு மொத்த தங்கத்தில் 75 முதல் 90 சதவீதம் வரை கொடுக்கின்றன. உங்கள் தேவைக்கேற்ப தங்கத்தின் மீது கடன் வாங்கலாம்.


எந்த கடன் காலம் சரியாக இருக்கும்


நீங்கள் தங்கக் கடன் வாங்கப் போகிறீர்கள் என்றால், எந்த காலத்திற்குள் நீங்கள் கடனை திருப்பி செலுத்த முடியுமோ, அந்த கால அளவிற்கான தேர்வையே செய்ய வேண்டும். இதனுடன், இஎம்ஐ -யின் படியும் கடன் காலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.


எக்ஸ்ட்ரா சார்ஜ்


நீங்கள் தங்கக் கடன் வாங்கப் போகிறீர்கள் என்றால், அந்த வங்கி வழங்கும் சலுகையை பற்றி முதலில் அறிந்து கொள்ளுங்கள். இதனுடன், கடனில் விதிக்கப்படும் கட்டணங்கள் போன்றவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். தங்கக் கடன் வாங்குபவர்கள் செயலாக்கக் கட்டணம், ஆவணங்கள், இஎம்ஐ பவுன்ஸ், தாமத கட்டணம் செலுத்துதல் போன்றவற்றைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | SBI: ரிஸ்க் இல்லாமல் வருமானம் ஈட்டலாம்... ரூ. 10 லட்சம், ரூ. 21 லட்சமாக மாறும்!


மேலும் படிக்க | 7th Pay Commission ஜாக்பாட் செய்தி: AICPI எண்களில் ஏற்றம், டிஏ 46% அதிகரிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ