May 1, 2023: மே 1 முதல் பல விதிகளில் மாற்றம், சாமானியர்களுக்கு நேரடி தாக்கம்

Major Changes from May 1, 2023: மே 1 முதல் நிகழவுள்ள முக்கிய மாற்றங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 29, 2023, 04:24 PM IST
  • மியூசுவல் ஃபண்டில் கேஒய்சி கட்டாயம்
  • ஜிஎஸ்டி விதிகளில் மாற்றங்கள்.
  • எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகள்.
May 1, 2023: மே 1 முதல் பல விதிகளில் மாற்றம், சாமானியர்களுக்கு நேரடி தாக்கம் title=

Rules Changing From 1st May 2023: ஏப்ரல் மாதம் முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இதற்குப் பிறகு மே மாதம் தொடங்கும். ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சில விதிகள் மாறுகின்றன. இந்த மாற்றங்கள் பெரும்பாலும் சாமானியர்களின் வாழ்வை நேரடியாக பாதிக்கும் வகையில் இருக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், இந்த விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிக முக்கியம். இல்லையெனில் நீங்கள் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். மே 1 முதல் நிகழவுள்ள முக்கிய மாற்றங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

ஜிஎஸ்டி விதிகளில் மாற்றங்கள்

மே மாத தொடக்கத்தில் இருந்து தொழிலதிபர்களுக்கு ஜிஎஸ்டியில் பெரிய மாற்றம் வரவுள்ளது. புதிய விதியின்படி, 100 கோடி ரூபாய்க்கு மேல் விற்றுமுதல் உள்ள நிறுவனங்கள், பரிவர்த்தனையின் ரசீதை 7 நாட்களுக்குள் இன்வாய்ஸ் ரெஜிஸ்ட்ரேஷன் போர்டலில் (IRP) பதிவேற்றம் செய்வது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது விலைப்பட்டியல்களின் உருவாக்கம் மற்றும் பதிவேற்றம் தேதிக்கு அத்தகைய வரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மியூசுவல் ஃபண்டில் கேஒய்சி கட்டாயம்

முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் கேஒய்சியுடன் கூடிய இ-வாலட்டுகள் மூலம் மட்டுமே முதலீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும் என மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களை சந்தை கட்டுப்பாட்டாளர் செபி கேட்டுக்கொண்டுள்ளது. இது மே 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்குப் பிறகு, முதலீட்டாளர்கள் கேஒய்சி உடனான இ-வாலட்கள் மூலம் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.

மேலும் படிக்க | SBI: ரிஸ்க் இல்லாமல் வருமானம் ஈட்டலாம்... ரூ. 10 லட்சம், ரூ. 21 லட்சமாக மாறும்!

எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகள்

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், அரசாங்கம் எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி ஆகியவற்றின் புதிய விலைகளை வெளியிடுகிறது. கடந்த மாதம் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலையை அரசு ரூ.91.50 குறைத்தது. இதன் பிறகு, டெல்லியில் வர்த்தக சிலிண்டர் ரூ.2,028 ஆக குறைக்கப்பட்டது. இருப்பினும், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மே 1 முதல் சிஎன்ஜி-பிஎன்ஜி விலையிலும் மாற்றம் இருக்கலாம்.

பிஎன்பி ஏடிஎம் பரிவர்த்தனை

நீங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், இந்த மாற்றம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது. உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாத நிலையில், ஏடிஎம் -இல் பணம் எடுத்து, பரிவர்த்தனை தோல்வியடைந்தால். வங்கியால் ரூ 10 + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு நிவாரணம்

மே 1 ஆம் தேதி முதல் பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கான விதிமுறைகளும் மாற உள்ளன. இனி இந்த வாகனங்களுக்கு பெர்மிட் கட்டணம் வசூலிக்கப்படாது. இது ஒரு பெரிய நிவாரணமாக பார்க்கப்படுகின்றது.

சென்ற மாதம், அதாவது ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்:

- வணிக பயன்பாடு எல்பிஜி சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டது. எனினும், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 

-  ஏப்ரல் 1 முதல், ஆறு இலக்க எண்ணெழுத்து HUID எண்ணைக் கொண்ட தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களை மட்டுமே விற்கமுடியும் என்ற விதி அமலுகு வந்தது.

- சம்பளம் வாங்கும் அரசு சாரா ஊழியர்களுக்கு, விடுப்பு பணப் பட்டுவாடா (லீவ் என்காஷ்மெண்ட்) மீதான வரி விலக்கு கணிசமாக அதிகரிக்கப்பட்டது. 2023 பட்ஜெட்டில் செய்யப்பட்ட அறிவிப்புகளின் கீழ், வரம்பு 3 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக அதிகரித்தது

- ஆக்ஸிஜன் மருந்துகள், வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற மருந்துகளின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டது.

மேலும் படிக்க | 7th Pay Commission ஜாக்பாட் செய்தி: AICPI எண்களில் ஏற்றம், டிஏ 46% அதிகரிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News