ஒவ்வொருவருக்கும் சேமிப்பு என்பது அத்தியாவசியமானது, அதிலும் நடுத்தர வர்க்கத்தினை சார்ந்தவர்கள் பலரும் தங்களது எதிர்கால தேவைக்காக தாங்கள் சம்பாதிக்கும் பணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பாக எடுத்து வைக்கின்றனர். இவ்வாறு மக்கள் சேமிக்கக்கூடிய நிதியானது அவர்களுக்கு கார்பஸைக் குவிப்பதற்கு உதவினாலும், ஓய்வுக்குப் பிந்தைய செலவினங்களைச் சந்திக்க போதுமானதாக இருக்காது என்கிற கவலை பலருக்கும் இருக்கிறது. உங்கள் நிதியை முறையாக நீங்கள் பகுப்பாய்வு செய்ய வேண்டும், அப்போது தான் உங்களால் எதிர்கால நிதி சிக்கல்கள் பற்றி கவலைகொள்ளாமல் இருக்க முடியும். உங்கள் தற்போதைய செலவினங்களின் எதிர்கால மதிப்பை மதிப்பீடு செய்த பின்னரே உங்கள் எதிர்கால வருமான ஆதாரங்களை திட்டமிட வேண்டும். அதேசமயம் ஒருவர் வளரும் வயதுக்கு ஏற்ப ஆகும் செலவுகளையும், பயணம் அல்லது புதிய இடத்திற்கு இடம் மாறுதல் போன்ற பொழுதுபோக்கு செலவுகள் மற்றும் உடல்நலம் சார்ந்த செலவுகளையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.
மேலும் படிக்க | மயில் உள்ள ‘10’ ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்கா... நீங்களும் அம்பானி ஆகலாம்!
ஆயுள் காப்பீட்டுத் திட்டம் எடுப்பது உங்கள் சேமிப்பின் சிறந்த வழியாக கருதப்படுகிறது, உங்கள் ஆண்டு வருமானத்தின் 10-12 மடங்குக்கு சமமான ஆயுள் காப்பீட்டுத் தொகையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணம், கடனைத் திருப்பிச் செலுத்துதல் போன்ற இதர அத்தியாவசியமான செலவுகளையும் நீங்கள் இதை சேர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் வாங்கிய ஆயுள் காப்பீட்டு திட்டமானது, ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும்பொழுது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா என்பதையும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மருத்துவ செலவுகள் என்பது எதிர்பாராத ஒன்று, இப்போது ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று சமயத்தில் மக்கள் பலரும் பல சிக்கல்களை எதிர்கொண்டனர். இதுபோன்ற எதிர்பாராத செலவுகளை சமாளிக்க நீங்கள் மருத்துவ காப்பீட்டை எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் எடுக்கும் மருத்துவ காப்பீடு நோய்கள் மற்றும் காயங்களுக்கான செலவுகளை பூர்த்தி செய்கிறதா என்பதை சரிபார்த்து அதற்கேற்ப நீங்கள் உடல்நலக் காப்பீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்போது அல்லது வீடு அல்லது ஏதேனும் ஒரு சொத்தை கடனாக நீங்கள் வாங்கியிருந்தால் உரிய தவணை காலத்திற்குள் நீங்கள் கடனை செலுத்தியிருக்க வேண்டும். சரியான காலத்தில் தவணையை செலுத்தாவிட்டால் வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும். இது எதிர்காலத்தில் உங்களுக்கு மட்டுமல்லாது உங்கள் குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய சுமையை ஏற்படுத்திவிடும். உங்கள் வருமானத்தை பல்வேறு முதலீடுகளில் செலுத்துவதற்கு முன்னதாக நீங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகைகளை பற்றி கவனத்தில் கொள்ளுங்கள். கடனை கருத்திற்கொள்ளாமல் நீங்கல் முதலீடு செய்வதில் கவனத்தை செலுத்தினால் முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட உங்களின் கடன் சுமை அதிகமாக இருக்கும். நீங்கள் போதுமான அளவு சேமிக்கவில்லையோ என கவலைப்பட்டால் இன்னும் சில விஷயங்களை நீங்கள் ஆராயுங்கள். தேவையற்ற ஆடம்பரமான விஷயங்களுக்கு செல்வது செய்வதிலிருந்து விலகியே இருங்கள், உங்கள் வருமானத்தை விட உங்களின் செலவுகள் எப்போதும் குறைவாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
மேலும் படிக்க | எழுதினால் ரூபாய் நோட்டுகள் செல்லாது? - உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ