புதுடெல்லி: நாட்டின் மிகப் பெரிய கடன் வழங்கும் வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி (SBI) ஆகஸ்ட் இறுதி வரை வீட்டுக்கடன் மீதான செயலாக்க கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக கடந்த மாதம் அறிவித்தது. எஸ்பிஐ அதன் வரையறுக்கப்பட்ட கால அளவிற்கான 'Monsoon Dhamaka Offer'-ன் கீழ், வீட்டுக் கடன் செயலாக்கக் கட்டணத்தை தள்ளுபடி செய்தது. எஸ்பிஐ வீட்டுக்கடன் வட்டி விகிதம் 6.70% இல் தொடங்குகிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சலுகையைப் பெற இன்று கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ​​எஸ்பிஐ வீட்டுக் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணம் 0.40 சதவிகிதம் என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்வது நல்லது." எஸ்பிஐ (SBI) வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் 6.70 சதவிகிதத்தில் தொடங்குகின்றன. நீங்கள் வீடு வாங்க இதை விட ஒரு சிறந்த நேரம் இருக்க முடியாது.” என்று எஸ்பிஐ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மான்சூன் தமாகா சலுகை 2021 ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் என்று SBI தெரிவித்துள்ளது.


எஸ்பிஐ வீட்டுக்கடன்: யோனோ செயலி மூலம் சலுகை


SBI வீட்டுக் கடனுக்காக யோனோ செயலி மூலம் விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 bps சலுகை வழங்கப்படும்.


எஸ்பிஐ வீட்டுக்கடன்: பெண்களுக்கு சலுகை


கடன் பெறும் பெண் வாடிக்கையாளர்களுக்கு கடன் விகிதத்தில் 5 அடிப்படை புள்ளிகளின் சலுகை அளிக்கப்படும்.


ALSO READ: SBI கல்விக்கடன்: இனி வெளிநாடு சென்று படிப்பது மிக சுலபம்!! 


"இந்த செயலாக்க கட்டண தள்ளுபடி சலுகை, வீடு வாங்குபவர்களை எளிதாக முடிவெடுக்க ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் வட்டி விகிதம் மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ளது. நாங்கள் அனைத்து இந்தியர்களுக்குமான வங்கியாக இருக்க விரும்புகிறோம். நாட்டின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றப் பணிகளில் பங்களிக்க விரும்புகிறோம்” என்று சிஎஸ் செட்டி, எம்.டி (ரீட்டெயில் மற்றும் டிஜிட்டல் வங்கி), கூறினார்.


இந்த மாத தொடக்கத்தில், இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு சில்லறை கடன்கள் (SBI Loans) மற்றும் வைப்புத்தொகைகளில் பல சலுகைகளை வழங்கியது. எஸ்பிஐ வங்கி, அனைத்து சேனல்களிலும் தனது கார் கடன் வாடிக்கையாளர்களுக்கான செயலாக்க கட்டணத்தில் 100% தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.


சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்கள் கார் கடன்களுக்கு 90% வரை ஆன்-ரோட் நிதி வழங்கும் வசதியை மேலும் அனுபவிக்க முடியும். YONO வழியாக கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி 25 bps சிறப்பு வட்டி சலுகையை வழங்கியது. தங்க கடன் வாடிக்கையாளர்களுக்கு, வங்கி, வட்டி விகிதத்தில் 75 பிபிஎஸ் குறைத்து வழங்கியது. YONO செயலி (SBI Yono ) மூலம் தங்கக் கடனுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கான செயலாக்கக் கட்டணத்தையும் வங்கி மேலும் தள்ளுபடி செய்தது.


வங்கி தனது தனிப்பட்ட மற்றும் ஓய்வூதிய கடன் வாடிக்கையாளர்களுக்கு, அனைத்து சேனல்களிலும் செயலாக்க கட்டணத்தில் 100% தள்ளுபடியை அறிவித்தது. கோவிட் முன்கள வீரர்களுக்கு 50 பிபிஎஸ் சிறப்பு வட்டி சலுகையையும் வங்கி அறிவித்தது.


ALSO READ: SBI வழங்கும் கொரோனா கடன்; குறைந்த வட்டியில் ₹5 லட்சம்; விண்ணபிப்பது எப்படி..!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR