அசத்தும் SBI: எஸ்.பி.ஐ வங்கியின் பென்சன் லோன் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

SBI Pension Loan Scheme: நீங்கள் எஸ்.பி.ஐ பேங்கில் வாடிக்கையளாராக உள்ளீர்களா? மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (State bank of india) பென்சன் லோன் ஸ்கீம் பற்றி இதோ தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 20, 2021, 05:46 PM IST
அசத்தும் SBI: எஸ்.பி.ஐ வங்கியின் பென்சன் லோன் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா? title=

SBI Pension Loan Scheme:எஸ்.பி.ஐ (SBI) வங்கியில் ஓய்வுப் பெற்ற ஊழியர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு செயல்பாட்டில் இருக்ககூடிய ஒரு கடன் வசதி தான் பென்சன் லோன் ஸ்கீம் (Pension loan scheme).

எஸ்.பி.ஐ இந்த கடன் வசதியை 9.75% வட்டி விகித்ததுடன் வழங்குகிறது. பெற்றோர்கள் உங்கள் வாரிசுகளின் கனவினை நிறைவேற்றி கொள்ள இந்த கடன் திட்டம் பெரிதும் பயன்படும். இது மருத்துவ செலவுக்கும் பயன்படும்.

இந்தத் திட்டத்தில் சேர்வதற்கு நீங்கள் குறைந்தபட்ச ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும். அதன் பிறகு நீங்கள் எஸ்.பி.ஐயின் (SBI) எந்தவொரு கிளையிலும் விண்ணப்பிக்க முடியும். இந்தப் பென்சன் லோனுக்கு (Pension scheme) நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது கூடுதல் தகவல்களை பெற விரும்பினால், 1800-11-2211 என்ற இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். 

ALSO READ | SBI Alert: இனி ஹோம் லோன் வாங்குவது ரொம்ப ஈஸி; முழு விவரம் இங்கே

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் ஓய்வூதியதாரர்களின் வயது 76 வயதிற்கும் குறைவாக இருக்க வேண்டும், இது தவிர, பென்சன் பேமெண்ட் ஆர்டர் (Pension Payment Order) எஸ்.பி.ஐ வங்கியில் இருந்தால் போதும் நீங்கள் இந்த லோனினை பெற முடியும்.

"இந்த திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஓய்வூதியதாரர்களுக்கான (Pensioners) ஒரு கடன் திட்டமாகும். எஸ்பிஐயில் உள்ள இந்த கடன் திட்டத்தை பற்றி இதுவரைக்கும் தெரியாதவர்கள், கொடுக்கப்படுள்ள கட்டணமில்லா எண்ணுக்கு (Toll free Number) தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் அருகில் உள்ள எஸ்.பி.ஐ (SBI) வங்கிக்கு சென்றும் இந்த கடன் (Loan) குறித்து தகவல்களை விசாரித்து கடன் பெறுவது பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

ALSO READ: SBI Home Loan: சுதந்திர தினத்தில் வங்கி அளித்த சூப்பர் சலுகை, விவரம் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News