ரயில் PNR ஸ்டேட்டஸ் நிலையை இனி நொடியில் வாட்ஸ்அப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.. எப்படி தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் நீண்டகாலமாக காத்திருப்பு பட்டியல் பிரச்சினையைத் தீர்க்கும் இந்தியாவின் முதல் WL & RAC இயங்குதளமான ரெயிலோஃபை (Railofy) ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிகழ்நேர PNR ஸ்டேட்டஸ் மற்றும் ரயில் பயணம் தகவல்களை பயணிகளுக்கு வாட்ஸ்அப்பிலேயே (WhatsApp) பகிர்ந்து கொள்கிறது.


பல செயலிகள் மற்றும் வலைத்தளங்களில் PNR நிலை (PNR status) மற்றும் ரயில் தாமதங்கள், லைவ் ஸ்டேஷன் நினைவூட்டல்கள் போன்ற பிற ரயில் தகவல்களைத் தேடுவது என ஒட்டுமொத்தமாக அதிக நேரம் எடுக்கும் செயல்முறைகளிலிருந்தும் நேரத்தை சேமித்து சௌகரியத்தை வழங்குவதை Railofy நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அம்சத்திற்காக பயனர் 10 இலக்க PNR எண்ணை ஒரு முறை மட்டும் +919881193322 என்ற WhatsApp எண் உடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.


ALSO READ | குறைந்த விலையில் புதிய 3 திட்டங்களை அறிமுகம் செய்த BSNL!


நிறுவனத்தின் தகவலின்படி, ‘ஒரு பொதுவான IRCTC பயனர் தனது PNR ஸ்டேட்டஸை பயண தேதிக்கு முன்னதாக சுமார் 10 முதல் 20 முறை சரிபார்க்கிறார். இதன் விளைவாக கூகிளில் PNR ஸ்டேட்டஸ் (PNR status) என்பதற்கு 1 கோடிக்கும் மேல் மாதாந்திர தேடல்கள் உள்ளன. இந்த சேவையின் மூலம், பயணிகள் தங்கள் வாட்ஸ்அப் எண்ணில் PNR நிலையின் வழக்கமான புதுப்பிப்புகளைப் பெறுவார்கள்.


இந்த அம்சம் ஏறுவதற்கு முன்பு ரயில் தாமத தகவல்களையும் வழங்குகிறது, எனவே பயணிகள் நிலையத்தை எப்போது அடைய வேண்டும் என்று தெரியும். ரயிலுக்குள் இருக்கும்போது, ​​அடுத்த வரவிருக்கும் நிலையம் குறித்தும் பயணிகளுக்கு அறிவிக்கப்படும்.


ALSO READ | Vi-ன் REDX Family Plan: 150GB data, OTT இலவச சந்தா, இன்னும் பல சலுகைகள்


செப்டம்பர் 2020 இல் தொடங்கப்பட்ட ரெயில்ஃபோயின் USP, ரயில்வே டிக்கெட் விலைக்கு நெருக்கமான விலை புள்ளிகளில் மாற்று பயணத்தை வழங்குகிறது. இது பெரும்பாலான இந்தியர்களுக்கு வசதி அல்லது நேரத்திற்கு சமரசம் செய்யாமல் மலிவு விலையில் பயணிக்க அனுமதிக்கிறது. பயணிகள் தங்களது டிக்கெட்டுக்கு எதிராக ரெயிலோஃபி பயன்பாட்டில் இருந்து சராசரியாக ரூ.50 முதல் தொடங்கி 200 ரூபாய் வரை பயண பாதுகாப்பை பெறலாம்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR