தீவிர புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை COVID-19 அபாயத்தை அதிகரிக்காது
மேம்பட்ட புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையானது தீவிரமான கோவிட் -19 உருவாவதற்கான அபாயத்தை அதிகரிக்காது என்று ஒரு ஆய்வு கூறுகிறது
நியூயார்க்: மேம்பட்ட புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையானது தீவிரமான கோவிட் -19 உருவாவதற்கான அபாயத்தை அதிகரிக்காது என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேச்சர் மெடிசின் (journal Nature Medicine) சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள புற்றுநோய் மையமான New York City cancer centre-இல் இருக்கும் 423 புற்றுநோய் பாதித்த நோயாளிகளில் 40 சதவிகிதத்தினருக்கு கோவிட் -19 இருப்பது கண்டறியப்பட்டது.
அமெரிக்காவின் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையம் Memorial Sloan Kettering Cancer Center மினி கம்போஜ் உள்ளிட்ட பல ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். 20 சதவீத நோயாளிகளுக்கு கடுமையான சுவாச பிரச்சனை ஏற்பட்டதாகவும், 12 சதவிகிதத்தினர் 30 நாட்களுக்குள் இறந்ததாகவும் மினி கம்போஜ் கூறுகிறார்.
இருந்தபோதிலும், கீமோதெரபி ஒரு மோசமான காரணியாக கண்டறியப்படவில்லை. ஆனால், checkpoint inhibitor immunotherapy மூலம் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் சுவாச சிக்கல்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டறிந்தார்கள்.
Read Also | கொரோனா நோயாளிக்கு COVID-19 நீரிழிவு அபாயத்தை ஏற்படுத்தும்: நிபுணர்
சீனா மற்றும் இத்தாலியில் இருந்து முந்தைய ஆய்வுகளின் முடிவுகளின்படி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படும்போது, அவர்களின் இறப்பு விகிதம் இருக்கிறது. ஆனால், இரண்டு நோய்களுக்கும் இடையிலான தொடர்பு பற்றி விஞ்ஞானிகளால் இன்னும் பெரிய அளவிலான தகவல்களை உறுதியாக சொல்லமுடியவில்லை.
அதுமட்டுமல்ல, புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் சிகிச்சையானது எவ்வாறு COVID-19 நோயை தீவிரமாக்கும் என்பதற்கான பதிலும் விஞ்ஞானிகளிடம் இல்லை.
இந்த ஆய்வில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 423 நோயாளிகளுக்கு ஏற்பட்ட COVID-19இன் மருத்துவ குணாதிசயங்களையும் அவர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வில் கலந்துக் கொண்டவர்களில் ஆண்கள் 212 பேர் பெண்கள் 211 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோயாளிகளில் சுமார் 56 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்ட மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். 59 சதவீத நோயாளிகளுக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகம் அல்லது இதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்கனவே இருந்தன, அவை அதிகரித்த நோயின் தீவிரத்தோடு தொடர்புடையவை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்ட 20 சதவீத நோயாளிகளில், 11 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகமாக இருந்தது என்றும் 9 சதவிகிதத்தினருக்கு சுவாசக் கருவிகளின் உதவி தேவைப்பட்டது என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
Read Also | நீரிழிவு நோயாளிகளுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம்: ஆய்வு
ரத்த புற்றுநோய், வெள்ளை அணுக் குறைவு, கார்டிகோஸ்டீராய்டு பயன்பாடு மற்றும் immune-checkpoint-inhibitor மருந்து சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
கடுமையான சுவாச நோய்க்கான ஆபத்து காரணிகளும் அதிகமாக இருந்தாலும், அவை அனைவருக்கும் ஒன்று போல இல்லை என்பதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
பல்வேறு புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளிடம் ஆய்வு செய்யவேண்டும் அப்போது தான் நிதர்சனமான நிலையை கூற முடியும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதேபோல், புற்றுநோய்க்கான வெவ்வேறு சிகிச்சை முறைகளால் COVID-19 ஏற்படுவதற்கான அடையாளங்கள் காணப்படுவது காலத்தின் கட்டாயம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.