சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கர்ப்பத்தை தவிர்க்க தனது பிறப்புறுப்பில் உலோக சுருள் (Spring) நுழைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவை சேர்ந்த அந்த 31 வயது பெண்மணி, பிறப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கையை எடுக்க விரும்பி இந்த விநோத விஷயத்தை மேற்கொண்டுள்ளார். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தானேக எடுத்த முடிவின் பேரில் இந்த நடவடிக்கையினை இவர் செய்துள்ளார். மேலும் இந்த சுருள் ஆனது IUD அல்லது கர்ப்ப தடுப்பானாக செயல்படும் எனவும் நம்பியுள்ளார்.


குறிப்பிட்ட இந்த பெண்மனிக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், நான்காவது குழந்தையினை தடுப்பதற்காக இந்த விபரீத முயற்ச்சியில் ஈடுப்பட்டுள்ளார். பின்னர் விபரீத முயற்சி வேதனையில் முடிய, இந்த உலோக சுருளை மீட்க மருத்துவரிடம் சென்றுள்ளார்.


சிறியதொரு அருவை சிகிச்சை மூலம் இளம்பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து உலோக சுருள் மீட்கப்பட்டது. மேலும் அவர் நான்கவாது குழந்தைக்கு கருவுற்றுள்ளார் எனவும் கண்டறியப்பட்டது. 


இந்த சம்பவமானது தெற்கு சீனாவின் கோங்காடவுன் மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது. முன்னதாக தனது 3-வது குழந்தையினை தடுக்கவும் அவர் இதேப்போன்ற உலோக சுருளை பயன்படுத்தியுள்ளார், எனினும் இவரது முயற்சி பலனளிக்கவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். தற்போது நான்காவது குழந்தைக்கு தாயாகவுள்ள நிலையில், தனது கருவினை கலைத்துவிடுமாறு மறுத்துவர்களிடன் கோரிக்கை விடுத்துள்ளார்.


எனினும் குழந்தை நன்கு ஆரோக்கியத்துடன் வளர்ந்திருப்பதால், கருவை கலைக்க மருத்துவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. 


இதுகுறித்து மருத்துவர் பூ ஜான்ஹௌ தெரிவிக்கையில், உலோக சுருள்கள் எப்போதும் கருதடை சாதனமாக பயன்படாது. அப்பெண்ணின் உடலில் இருந்து மீட்கப்பட்ட உலோக சுருள் ஆனது சுமார் 5 செமி நீளம் கொண்டது. எங்களால் முழு சுருளையும் மீட்க முடியவில்லை, ஒரு சிறு துண்டினை மட்டுமே நாங்கள் மீட்டுள்ளோம் என தெரிவித்தார்.