மனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கிட்டு அவர்கள் சொர்க்கம் அல்லது நரகம் செல்வதற்கான முக்கிய முடிவுகளை எடுக்கும் உபாயமாக உள்ளவரே சித்திரகுப்தர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சித்திரகுப்தருக்கென தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில் மட்டுமே தனிக்கோயில் அமைந்துள்ளது.காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நெல்லுகாரத்தெரு பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயிலில், சித்திரகுப்தர் அவதரித்த தினமாகக் கருதப்படும் சித்ரா பௌர்ணமி தினமான இன்று, காலை சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு சித்திரகுப்தர் மற்றும் அவரது தேவியான கர்ணகி என்கிற சித்திரலேகாவுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.


மேலும் படிக்க | தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்; எதிர்சேவையில் மக்கள் பரவசம்


அதனைதொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க,வைர ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.


கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்விழா நடைபெறாததால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் இவ்வாண்டு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் பக்தர்கள் பரிகாரத்திற்காக எள்ளின் மேல் 7 நெய்விளக்கு ஏற்றி சிறப்பு அர்ச்சனை செய்து வருகின்றனர்.


இவ்விழாவினை ஒட்டி இந்து சமய அறநிலையத்துறையினரால் பொது தரிசனம்,சிறப்பு தரிசனம் என இருவகைபடுத்தப்பட்டு தனிதனியே வரிசைபடுத்தப்படுத்தப்பட்டதில் ஆயிரகணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


இவ்விழாவையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டு 50க்கும் மேற்பட்ட போலீசார்,ஊர் காவல்படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் இன்று இரவு சித்திரகுப்தருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று கல்யாண திருக்கோலத்தில் திருவீதியுலா நிறைவுபெறவுள்ளது குறிப்பிடதக்கது.


இந்த நிலையில் இந்த வருடம் சித்ரா பௌர்ணமி இன்று வருகிறது. இன்று சித்திரகுப்தரின் படத்திற்கு முன் பேனா, காகிதம் முதலியவற்றை வைத்து மலர்களால்பூஜித்து வணங்கலாம். பானகம், நீர் மோர் போன்றவற்றை நிவேதனமாகப் படைத்து அருந்தலாம்...


மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இனி சனிபகவானின் வக்ர பார்வை இருக்காது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR