இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் உலகிலேயே மிகச்சிறிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த அட்டை 15 x 20 micrometers என்ற அளவில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.


இந்த கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை மைக்ரோஸ் கோப் மூலமாக மட்டும் தான் பார்க்க முடியும். இது பிளாட்டினத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மீது சிலிகான் நைட்ரேட் முலாம் பூசப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மூலமே இதை பயன்படுத்த முடியும்.



உலகிலேயே மிகச்சிறிய அளவிலான கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை என சாதனை படைத்துள்ள இதை இங்கிலாந்தின் தேசிய இயற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள் டேவிட்காஸ், கென்மிஸ்கார்ட் ஆகியோர் உருவாக்கினர்.