சூப்பரா கிறிஸ்மஸ் கேக் செய்யலாம்! 2 பொருட்கள் போதும்! எப்படி தெரியுமா?
Christmas Cake Simple Recipe : கிறிஸ்மஸ் நெருங்கியாச்சு..கேக் செய்யலன்னா எப்படி? இதோ அதற்கான ஈசியான டிப்ஸ்!
Christmas Cake Simple Recipe : டிசம்பர் மாதம் வந்து விட்டாலே, பலருக்கும் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் மாதமும், இந்த வருடம் முடியப்போகிறது என்பதும்தான். இந்தியாவில், குறிப்பிட்ட சிலர் மட்டுமே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஆனால் வெளிநாடுகளில் இந்த பண்டிகை, புது வருடத்துடன் சேர்த்து விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆனால், எந்த நாட்டில் கொண்டாடப்பட்டாலும் கிறிஸ்மஸில் தவிர்க்கப்பட முடியாத ஒரு பொருளாக இருக்கிறது கேக். இதனை செய்ய பலர் என்னென்னவோ ரெசிப்பிக்களை பார்ப்பர், பல பொருட்களை வீட்டில் வாங்கி குவித்து வைத்திருப்பர். ஆனால், இதை மிகவும் சிம்பிளாக 2 பொருளை வைத்துக்கூட செய்யலாம். எப்படி தெரியுமா?
தேவையான பொருட்கள்:
2 பேக்கெட் சாக்லெட் பிஸ்கட் (200 கிராம்)
பால்
தேவைப்பட்டால் சிறிதளவு சர்க்கரை மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்த்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | தக்காளி தேவையே இல்ல, இந்த சூப்பரான ரெசிபியை டிரை பண்ணுங்க
செய்யும் முறை:
2 பேக்கெட் சாக்லேட் பிஸ்கட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பிஸ்கெட் எந்த பிராண்ட் உடையதாக வேண்டுமானாலும் இருக்கலாம். நல்ல பிராண்ட் பிஸ்கட் ஆக இருந்தால் கேக்-உம் நன்றாகவே வரும்.
இந்த பிஸ்கெட் மொத்தமாக 200 கிராம் அளவிற்கு இருக்க வேண்டும். இதனை சின்ன சின்ன துண்டுகளாக உடைத்து மிக்ஸி ஜாரில் போட்டுக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சமாக சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.
ஜாரில் போட்ட சாக்லெட் பிஸ்கெட்டுகளை நன்கு பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இது மிகவும் கெட்டியாக இல்லாமல் பவுடர் போல இருக்க வேண்டும்.
அரைத்து வைத்த பிஸ்கட் பவுடரில் கால் கப் அளவிற்கு பாலை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன் பதம், தண்ணீர் போல அல்லாமல் கெட்டியாக இருக்க வேண்டும்.
இதனுடன் தேவைப்பட்டால் கால் ஸ்பூன் அளவு பேக்கிங் பவுடர் சேர்த்துக்காெள்ளலாம். இதனால் கேக் கொஞ்சம் உப்பி, பெரிதாக வரும்.
பேக்கிங் ட்ரே வை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதில் பட்டர் பேப்பர் வைத்து அதில் வெண்ணெய் சேர்த்து க்ரீஸ் செய்துக்கொள்ள வேண்டும்.
அந்த ட்ரேவில் கலக்கி வைத்த கலவையை எடுத்து, ஊற்றிக்கொள்ள வேண்டும்.
மைக்ரோ வேவ் அவனில் முன் கூட்டிய ப்ரீ-ஹீட் செய்து கொள்ள வேண்டும். பின்பு, அதனை 180 டிகிரி செல்சியஸ் டிகிரியில் அவனிடில் வேக வைக்க வேண்டும். இதனை 20 நிமிடங்களுக்கு வைக்கலாம்.
இதனை வெந்து விட்டதா இல்லையா என்று பார்ப்பதற்கு ஸ்பூன் அல்லது கத்தியை எடுத்து, அதில் குத்தி பார்க்க வேண்டும். அது, அந்த கத்தியிலோ அல்லது ஸ்பூனிலோ ஒட்டிக்கொள்ளாமல் இருந்தால் கேக் வெந்து விட்டது என்று அர்த்தம்.
கடைசியாக டாப்பிங்கஸிற்காக சாக்லேட் சிப்ஸ், உலர் பழங்கள் அல்லது எள்ளை மேலே தூவி விடலாம்.
இந்த கேக்கை ஆற வைத்து அல்லது அப்படியே சூடாக சாப்பிடலாம்.
சாக்லேட் கேக் உடன் என்ன சேர்க்கலாம்?
சில சமயங்களில் சாக்லேட் கேக்கை அப்படியே சாப்பிட நன்றாக இருக்கும். அப்படி இல்லை என்றால், வென்னிலா பட்ட்ர் க்ரீமை கேக்கை இரண்டாக வெட்டி அதற்கு நடுவில் வைத்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க | வீட்டிலேயே பீட்ஸா செய்வது எப்படி..? சிம்பிள் ரெசிபி இதோ..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ