இந்தியாவில் கலை கட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!!
இந்தியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பரிசு, அலங்காரப் பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான அலங்கார பொருட்கள் விற்பனை கலை கட்டியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் அல்லது கிறிஸ்து பிறப்பு விழா, கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்றனர். அதேசமயம், கிழக்கு மரபு வழி திருச்சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஜனவரி 7ம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.
இந்தப் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளின் முன்பாக கிறிஸ்துமஸ் மரங்களை அமைப்பது, நட்சத்திர விளக்குகள் மற்றும் சீரியல் விளக்குகளைத் தொங்கவிடுவது, இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும்விதமாக குடில் அமைப்பது என மகிழ்ச்சியுடன் பல வேலைகளைச் செய்துவைத்திருப்பார்கள்.
அத்துடன் புத்தாடை வாங்கி அணிவது, பட்டாசு கொளுத்துவது, கேக் வெட்டுவது, பலகாரங்கள் செய்வது என கிறிஸ்தவர்களின் வீடுகள் விழாக்கோலம் பூணும். ஆலயங்களிலும் கிறிஸ்துமஸை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம்.
எனவே, அத்தகைய கிறிஸ்துமஸ் பண்டிகையில் வரவையொட்டி சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்து காத்து கொண்டிருகின்றனர்.
அலங்கார மரங்கள், மரத்தை அலங்கரிக்கும் வண்ண வண்ண விளக்குகள், விதவிதமான கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு, இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பல்வேறு தரப்பினர் சொந்த ஊர் செல்வதற்காக பஸ், ரயில் நிலையங்களில் கூட்டங்கள் காணப்படுகின்றனர்.
இதனால் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்திருக்கிறது. இதையடுத்து நேற்று மாலையிலிருந்தே இந்தியாவில் ரயில் நிலையம், பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.