தான் இறந்ததாக விடுப்பு கேட்டு எட்டாம் வகுப்பு மாணவன் தலைமை ஆசிரியருக்கு விடுமுறை விண்ணப்பம் அனுப்பியுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், தான் இறந்ததாக விடுப்பு கேட்டு எட்டாம் வகுப்பு மாணவன் தலைமை ஆசிரியருக்கு விடுமுறை விண்ணப்பம் அனுப்பியுள்ளார். 


உத்தர பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் 8 ஆம் வகுப்பு பயிலும் ஒரு மாணவன் அரைநாள் விடுப்பு தருமாறு தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்டுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்; ‘நான் இன்று காலை 10 மணியளவில் இறந்துவிட்டதால் சீக்கிரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும்’ என எழுதியிருந்தான். தன் பாட்டி இறந்து விட்டதாக எழுதுவதற்கு பதில் அவ்வாறு எழுதியுள்ளான். இதை கவனிக்காத தலைமை ஆசிரியரும் கையொப்பமிட்டு அனுமதி வழங்கியுள்ளார்.



மாணவரின் இந்த விடுப்புக் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வேடிக்கையான நிகழ்விற்கு பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.