சுத்தம் சோறு போடும் என்றும், கந்தையானாலும் கசக்கிக் கட்டு சொல்வார்கள். நாம் நமது வீடுகளில் பற்பல உபகரணங்களை பயன்படுத்துகிறோம். ஆனால் அவற்றை பராமரிப்பதும் மிகவும் அவசியமானது. ஆனால் அவற்றை கையாள்வது மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்பதால், பலர் அவற்றை சுத்தம் செய்யாமல் விட்டுவிடுகின்றனர். மின்சாரம் இல்லாவிட்டால் மிகவும் கஷ்டப்படும் நிலைக்கு வந்துவிட்டோம். ஆனால் மின்சாரத்தை பயன்படுத்த நாம் தினசரி பலமுறை தொடும் சுவிட்ச் போர்டு விரைவில் அழுக்காகிவிடும், ஆனால் சுத்தம் செய்வதற்கு தயக்கமும் இருக்கிறது. ஆபத்தில்லாமல் 5 நிமிடத்தில் சுவிட்ச் போரை சுத்தம் செய்யலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுத்தம் செய்யும் போது, ​​வீட்டின் மின் பொத்தான்கள் மற்றும் சுவிட்ச் போர்டு இரண்டையும் சுத்தம் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.


மேலும் படிக்க | டிக்கெட் புக்கிங்கில் புதிய விதிகளை அமல்படுத்தியது ஐஆர்சிடிசி!


சுவிட்ச்போர்டை பாதுகாப்பாக எப்படி சுத்தம் எப்படி செய்வது ?


அடிக்கடி  பயன்படுத்தும் சுவிட்ச் மற்றும் அதன் போர்டு விரைவில் அழுக்காகி அசிங்கமாகிவிடுகிறது. அதில் இருக்கும் அழுக்கு மற்றும் கருப்பு புள்ளில்களைப் போக்கி, புத்தம்புதிதாக ஜொலிக்க வைக்க ஒரு சுலபமான ஆனால் அற்புதமான மந்திரம் இருக்கிறது.


வீட்டின் எலெக்ட்ரிக் ஸ்விட்ச் போர்டை சுத்தம் செய்யத் தொடங்குவதற்கு முன்னதாக மின்சாரத்தை அணைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அணைப்பது என்றால் நிறுத்தி வைப்பது, தவறாக அதை தழுவிவிட வேண்டாம். மின்சாரம் துண்டிக்கப்படாவிட்டால், மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த விஷயத்தை மனதில் கொள்ளுங்கள்.


பற்பசையைப் பயன்படுத்தி மின் சுவிட்ச் போர்டை கண்மூடி திறக்கும் நொடிப் பொழுதில் சுத்தம் செய்துவிடலாம். பற்பசை, பற்களை சுத்தம் செய்யப் பயன்படுகிறது. அதேபோல், மின் சுவிட்ச் போர்டையும் சுத்தம் செய்வதிலும் நல்ல பலனை அளிக்கிறது.  


மேலும் படிக்க | JOB Openings: ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தில் வேலை ரெடி


முதலில், ஒரு பாத்திரத்தில் 4 முதல் 5 ஸ்பூன் பற்பசையை எடுக்க வேண்டும்.
அதனுள் இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.
இந்த இரண்டு பொருட்களையும் நன்கு கலந்து பேஸ்ட்டை தயார் செய்யவும்.
அதன் பிறகு, அதில் சில துளிகள் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் இந்த பேஸ்ட்டை உங்கள் அழுக்கு ஸ்விட்ச் போர்டில் தடவி 5 நிமிடங்கள் காயவிடவும்.
5 நிமிடங்களுக்குப் பிறகு, நீங்கள் சுவிட்ச் போர்டை பழைய பிரஷ் மூலம் தேய்க்க வேண்டும்.
பற்களை விட அதிகமாக பளபளக்கும் உங்கள் சுவிட்ச்போர்டு புதியது போல் ஜொலிக்கும்.


மேலும் படிக்க | 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ