சிஎன்ஜி விலை உயர்வு: அதானி காஸ் சிஎன்ஜியின் விலையை உயர்த்தியுள்ளது. அதானி கேஸ் லிமிடெட் நிறுவனம் சிஎன்ஜி காஸ் விலையை 2 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமுலுக்கு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்கள் CNG எரிவாயுவைப் பயன்படுத்துபவராக இருந்தால், இது கவலை தரும் செய்தி. உங்கள் வாகனம் CNG எரிவாயுவில் இயங்கினால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. 


அதானி கேஸ் லிமிடெட் CNG எரிவாயுவின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விலை அதிகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | CNG விலை உயர்வு; நடுத்தர மக்களுக்கு அதிக பாதிப்பு


எனவே, இப்போது சிஎன்ஜியின் புதிய விலை கிலோவுக்கு ரூ.73.09 ஆக உள்ளது. முன்னதாக இதன் விலை கிலோ ரூ.71.09 ஆக இருந்தது. 


அதானி காஸ் விலையை உயர்த்தியது
அதானி கேஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து சிஎன்ஜி கேஸ் எடுத்தால், இதற்கு கிலோவுக்கு ரூ.2 கூடுதலாக செலுத்த வேண்டும்.


அதானி கேஸ் லிமிடெட் மட்டுமே CNG எரிவாயுவின் விலையை உயர்த்தியுள்ளது என்பதையும், இந்த விலைகள் உடனடியாக அமலுக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | குறைந்த விலையில் TATA CNG கார்கள்


எம்ஜிஎல் நிறுவனமும் விலையை உயர்த்தியது
முன்னதாக புத்தாண்டு அன்று, மகாநகர் கேஸ் லிமிடெட், மும்பைவாசிகளுக்கான CNG மற்றும் PNG (CNG-PNG) விலைகளை உயர்த்தியது. 


இந்த விலை உயர்வு, கடந்த ஜனவரி 8ம் தேதி அமலுக்கு வந்தது. மகாநகர் கேஸ் லிமிடெட் சார்பில் எரிவாயு விலையை உயர்த்தியபோது,  சிஎன்ஜியின் விலை கிலோவுக்கு ரூ.63.40ல் இருந்து ரூ.66 ஆகவும், பிஎன்ஜியின் விலை எஸ்சிஎம் ஒன்றுக்கு ரூ.38ல் இருந்து ரூ.39.50 ஆகவும் உயர்த்தப்பட்டது.


நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எரிபொருள் விலை, ஒட்டுமொத்த விலைவாசியையும் உயர்த்துவதால், இந்த விலையுயர்வும் மக்களுக்கு கவலையளிக்கிறது.


மேலும் படிக்க | சிலிண்டர் மானியம் நிறுத்தப்படுமா? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR