CNG விலை உயர்வு; நடுத்தர மக்களுக்கு அதிக பாதிப்பு

CNG Price Hike: CNG விலை (CNG Price Hike) இன்று முதல் உயர்ந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 4, 2021, 11:12 AM IST
CNG விலை உயர்வு;  நடுத்தர மக்களுக்கு அதிக பாதிப்பு title=

புதுடெல்லி: CNG Price today: டெல்லி-என்சிஆர் பகுதியில் மீண்டும் CNG விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலைகள் சனிக்கிழமை காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது, அதன்படி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சிஎன்ஜியின் விலை கிலோவுக்கு 1 ரூபாய் அதிகரித்துள்ளது. இது தவிர, ராஜஸ்தான், ஹரியானாவிலும் புதிய கட்டணங்கள் பொருந்தும்.

டெல்லியில் சிஎன்ஜி விலை அதிகமாகிறது
அரசு நிறுவனமான இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (IGL) சாமானிய மக்களுக்கு பெரும் அடி கொடுத்துள்ளது. டெல்லி, ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை சிஎன்ஜி விலையை (CNG Price) ஐஜிஎல் திருத்தியுள்ளது. நாட்டில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, தற்போது சிஎன்ஜியின் விலையையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ | சிலிண்டர் விலை உயர்வு; மக்கள் வயிற்றில் மீண்டும் அடி

இரண்டு மாதங்களில் நான்காவது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது
சனிக்கிழமை முதல், டெல்லியில் சிஎன்ஜி ஒரு கிலோவுக்கு ரூ.53.04 என்ற விகிதத்தில் கிடைக்கும், குருகிராமில் அதன் விலை கிலோவுக்கு ரூ.60.4 ஆக இருக்கும். அதேபோல், ராஜஸ்தானின் அஜ்மீர், பாலி உள்ளிட்ட பல பகுதிகளில் சிஎன்ஜியின் விலை கிலோ ரூ.67.31 ஆக இருக்கும்.

முன்னதாக நவம்பர் 14 அன்று, CNG இன் விலையை ஐஜிஎல் உயர்த்தியது. அதன்படி டெல்லியில் சிஎன்ஜியின் விலை கிலோவுக்கு ரூ.2.28 உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில், நொய்டா, கிரேட்டர் நொய்டா, காசியாபாத் ஆகிய இடங்களிலும் சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2.56 ஆக உயர்ந்தது. அக்டோபர் 1ஆம் தேதிக்குப் பிறகு நான்காவது முறையாக சிஎன்ஜியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. Indraprastha Gas Limited-ன் இந்த முடிவுக்குப் பிறகு, மற்ற நிறுவனங்களும் CNG விலையை அதிகரிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ALSO READ:LPG Subsidy | சிலிண்டர் மானியம் நிறுத்தப்படுமா? மத்திய அரசின் திட்டம் என்ன? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News