பொங்கல் சிறப்பு பண்டிகையை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் கல்லூரிகளில் மாணவர்கள் பொங்கல் வைத்து தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களை போற்றிடும் திருநாளாகவும், உழவு தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நன்நாளாகவம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


தை மாதம் முதல் நாள் அன்று ஆண்டு முழுவதும் அதிகமான மழை பொழியவும், தானியங்கள் நன்கு விளையவும் தெய்வங்களை வணங்கும் பண்டிகை பொங்கல் திருநாளாகும்.


அத்தகைய,பொங்கல் சிறப்பு பண்டிகையை முன்னிட்டு அனைத்து,கல்லூரிகளில் மாணவர்கள் பொங்கல் வைத்து தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.


அதில் ஒரு பகுதியாக, தற்போது கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சங்கத் தமிழனின் சமத்துவப் பொங்கல் பெருவிழா கல்லூரி மைதானத்தில் நடைப்பெற்றது.


இதில், அந்த கல்லூரி்யை சேர்ந்த 1000 க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் புதிய புத்தாடைகள் அணிந்து கிராமத்து பாணியில்,விறகு அடுப்பில் பொங்கல் வைத்து விழாவை சிறப்பித்தனர்.