பெண்ணின் நுரையீரலில் ஆணுறை சிக்கிய ஒரு வழக்கு வெளியாகியுள்ளது, இந்த சம்பவம் மருத்துவர்களையும் ஆச்சரியப்படுத்தியது. பெண் ஒருவர் தனக்கு தொடர்ந்து ஆறு மாதங்களாக வரும் இருமல்,காய்ச்சல் போன்ற பல அறிகுறிகளை அனுபவித்த பின் தனக்கு காச நோய் இருப்பதாக அறிந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் அவருக்கு ஏற்பட்ட  சந்தேகத்தை உடைக்கும் வகையில் அது காசநோய் (TB) இல்லை என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர்.


இதன் பின்னர், மருத்துவர்கள் பெண் நுரையீரலின் எக்ஸ்ரே செய்தனர். எக்ஸ்ரேயில் (X-Ray) வெளிவந்ததைக் கண்டு டாக்டர்களும் ஆச்சரியப்பட்டனர். எக்ஸ்ரேயில், சில சிறிய பிளாஸ்டிக் பை நுரையீரலில் சிக்கிக்கொண்டது தெரிந்தது. நெருக்கமாக பரிசோதித்தபோது, இந்த பிளாஸ்டிக் பை ஆணுறை தவிர வேறில்லை என்று கண்டறியப்பட்டது.


ALSO READ | மகனின் பர்ஸில் இருந்த ஆணுறை; துணியை துவைக்க எடுத்த அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!


டாக்டர்கள் அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து ஆணுறை வெளியே எடுத்தனர். இப்போது மருத்துவர்கள் நுரையீரலில் காணப்படும் ஆணுறை (Condom) எவ்வாறு பெண்ணின் நுரையீரலை (Condom Found in Lungs) அடைந்தது என்பதை அறிய விரும்பினர், ஆனால் அந்த பெண் சங்கடத்தால் எதுவும் கூறவில்லை. அச்சம்பவத்தை குறித்து  பெண் மற்றும் அவரது கணவர் இருவரும் பொய் கூறியது ஒப்புக் கொண்டனர்.


ஆரம்பத்தில் அந்த பெண் மருத்துவரிடம் எதுவும் சொல்லாமல் வெட்கப்பட்டுக் கொண்டு அனைத்தையும் மறைத்துவிட்டார். பின்னர் மருத்துவர்கள் கேட்ட பின்பு அந்தப் பெண் ஆணுறையை தெரியாமல் விழுங்கி விட்டதாக ஒப்புக் கொண்டார் மருத்துவர்கள் எஞ்சியிருந்த சிறிய ஆணுறையின் துண்டுகளை அகற்ற மூச்சுக் குழாய் மூலம் பரிசோதனை செய்தனர்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR