புது தில்லி: அலுவலகத்தில் வேலை செய்வதில் எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது, என் விருப்பப்படி எனக்கு உணவு கிடைக்கவில்லை. இப்போது எனக்கு மனநிலை மோசமாகிவிட்டது. நான் குண்டாகி விட்டேன். என் நண்பரின் திருமணத்திற்கு செல்வதற்கு நல்ல ஆடை இல்லை. வாழ்க்கையே சரி இல்லை. எனக்கு மட்டும் ஏன் கடவுள் இப்படி எல்லாம் செய்கிறார். இதுபோன்ற வாரத்தைகளை ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நீங்கள் கேட்பவை தான். இன்றைய நவீன வாழ்க்கையில், பலர் தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற கனவுடன் வேகமாக சென்றுக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் சில பேர் மட்டுமே எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், அவர்கள் உற்சாகமூட்டும் மகிழ்ச்சிகளோடு, புன்னகைத்து, தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் நேசிப்பவர்களாக இருப்பார்கள். அப்படி இருப்பவர்கள் தான் இந்தியாவில் வாழும் இரண்டு சகோதரர்கள். இவர்களை பற்றி தான் இப்பொழுது சமூக ஊடகத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் நகரில் வசிக்கும் சிவநாத் மற்றும் சிவராம் சாகு என்ற இரண்டு சகோதரர்கள். இவர்கள் வயிற்றுடன் தொடர்புடைய இரட்டையர்கள். இந்த இருவரும் தங்கள் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை. ஆனால் கீழே உள்ள வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக நீங்கள் உணர்வீர்கள். 


இந்த இரட்டையர்களை குறித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் இந்த இரட்டையர்களின் கதை காட்டப்பட்டு உள்ளது அவர்கள் தங்கள் வாழ்வில் பல துன்பங்களை எப்படி எதிர்க்கொள்கிறார்கள். அதேவேளையில் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் நேசிப்பவர்களாக இருக்கிறார்கள். நாங்கள் உயிரோடு இருக்கும் வரை எங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.


 



சிவன்நாத் மற்றும் சிவராம் சாகு இரட்டையர்களுக்கு 12 வயது ஆகிறது. இவர்களின் உடல் வயிற்று பகுதியில் இருந்து இணைக்கப்பட்டுள்ளது. அவர்களின் நுரையீரல், இதயம் மற்றும் மூளை வேறுபடுகின்றன. இருவருக்கும் இரண்டு கால்கள் மற்றும் நான்கு கைகள் உள்ளன. சட்டீஸ்கர் ராய்ப்பூர் மருத்துவமனையில் இந்த இரட்டையர்கள் பிறந்த போது, இவர்கள் தெய்வத்தின் அவதாரம் எனக்கருதி பலர் வழிபட தொடங்கினர். நோயினால் பாதிக்கபட்டு தான் இவர்கள் இணைந்து பிறந்தார்கள் என பின்னர் தெரிய வர, இரட்டையர்களை வழிபடுவதை கிராமத்தினர் கைவிட்டனர்.  


சிவநாத் மற்றும் சிவராமின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் தங்கள் மகன்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள். இந்த தம்பதியருக்கு ஐந்து மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் தந்தை கூலி வேலை செய்து தன் குடும்பத்தை நடத்தி வருகிறார்.


இந்த இரட்டையர்கள் பள்ளிக்கு செல்கிறார்கள். மாடி படிக்கட்டில் ஏறுகிறார்கள். ஒருவர் உட்கார்ந்து சாப்பிடும் போது, மற்றொருவர் படுத்துக்கொண்டு சாப்புடுகிறார். தங்களை குறித்து "நாங்கள் உங்களைப் போலவே இருக்கிறோம், சாதரண மனிதன் வாழும் வாழ்க்கையே வாழ்கிறோம். அதில் எந்த வித்தியாசமும் இல்லை" என்று சிவராம் கூறுகிறார்.