சென்னை: கொரோனா வைரஸ் பீதி ஏற்பட்டதை அடுத்து முதலீட்டாளர்கள் இழப்புகளை ஈடுசெய்ய தங்களால் முடிந்த அனைத்தை முதலீடுகளையும் கலைத்ததால் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை தேசிய தலைநகரான டெல்லியில் 10 கிராமுக்கு 1,097 ரூபாய் குறைந்து 42,600 ரூபாயாக சரிந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளில் மிகப் பெரிய வாராந்திர வீழ்ச்சியை தங்கம் பதிவு செய்துள்ளது. ஏனெனில் உலகளாவிய பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பால், தங்கத்தின் மீது முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.


ஒரு கிலோ ரூ .45,704 ஆக இருந்த வெள்ளியின் விலை ரூ .1,574 குறைந்து ரூ .44,130 ஆக இருந்தது.


அதேபோல சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,152 குறைந்து ரூ.32,104க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல  சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 2.90 குறைந்து ரூபாய் 46.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது வெள்ளி கிலோவுக்கு சுமார் 1000 ரூபாய் வரை குறைந்தது.


உலகளவில், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,584 அமெரிக்க டாலராக உயர்ந்தது. வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 15.65 அமெரிக்க டாலராக குறைந்தது.