மாஸ்க் பரோட்டா வரிசையில் தற்போது மாஸ்க் நான் மற்றும் கோவிட் குழம்பு இணையத்தில் வைரலாகி வருகிறது...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாஸ்க் நான் மற்றும் கோவிட் குழம்பு செய்து அசத்தியுள்ளது ராஜஸ்தானில் உள்ள உணவகம் ஒன்று. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முகமூடி அணிய வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பிட்டு கழுவ வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற பல்வேறு நடவடிக்கைகளை கடாய் பிடித்து வருகிறோம். இந்நிலையில், மாஸ்க் பரோட்டா வரிசையில் தற்போது மாஸ்க் நான் மற்றும் கோவிட் குழம்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. 


கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என சுகாதார ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் வடிவில் ஹெல்மெட் தயாரிப்பது, ஆட்டோவில் கொரோனா வைரஸ் குறித்து விழ்ப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவை செய்யப்பட்டுவந்தது.


அதற்கு ஒரு படி மேல், மதுரையில் உல்ள ஹோட்டல் ஒன்று மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாஸ்க் வடிவில் பரோட்டா தயாரித்து அசத்தியது. அதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது மட்டுமல்லாமல் பலர் அந்த ஹோட்டல் உரிமையாளரை பாராட்டிவந்தனர்.



இது ஒரு புறம் இருக்க, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள உணவகம் ஒன்று கொரோனா வைரஸ் குறித்து வித்தியாசமான விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்திவருகிறது. ஜோத்பூரில் உள்ள வேதிக் உணவகத்தில் மாஸ்க் நான் மற்றும் கரோனா குழம்பு என்ற வித்தியாசமான காம்போ ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்த புகைப்படத்தை அந்த உணவகம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. பலர் அந்த நிறுவனத்தின் செயலை பாராட்டிவருகின்றனர்.