விராட் கோலியின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?
Virat Kohli net worth: கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரது சொத்து மதிப்பு விவரங்களை பற்றி பார்ப்போம்.
Virat Kohli net worth: சேஸ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் விராட் கோலி களத்தில் அவுட் ஆகாமல் இருக்கும் வரை, எதிரணிக்கு பயம் இருந்து கொண்டே இருக்கும். பல அசாதாரண போட்டிகளில் தனி ஆளாக வென்று கொடுத்துள்ளார். டெல்லியில் பிறந்து வளந்த விராட் கோலி தற்போது கிரிக்கெட் ஜாம்பவனாக உள்ளார். டி20 கிரிக்கெட்டிற்கு விராட் கோலி செட் ஆகமாட்டார் என்று பலரும் கூறி வந்த நிலையில், ஐபிஎல் 2024ல் ஆரஞ்சு கேப் பெற்று இதுவரை 708 ரன்கள் அடித்துள்ளார். தன் மீது வரும் விமர்சனங்களை தன் பேட்டின் மூலம் தீர்த்து வருகிறார் விராட் கோலி. கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக இருந்த சாதனைகளை விராட் கோலி எளிதாக முறையடித்து வருகிறார்.
எண்ணற்ற சதங்கள் மற்றும் மேட்ச் வின்னிங் பெர்ஃபார்மென்ஸ் மூலம் விராட் கோலி இந்திய அணிக்கு எல்லா காலத்திலும் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக மாறி உள்ளார். இந்திய அணிக்காக அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் பல சாதனைகள் உருவாகும் அல்லது ஏற்கனவே இருக்கும் சாதனை உடையும். விராட் கோலி இந்தியாவின் இரண்டாவது உயரிய விளையாட்டு விருதான அர்ஜுனா விருதை வென்றுள்ளார். மேலும் பத்மஸ்ரீ, மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இது தவிர டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் 2019ல் கோலியின் பெயர் ஒரு ஸ்டாண்டிற்கு வைக்கப்பட்டுள்ளது.
திருமண வாழ்க்கை
விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். ஒரு விளம்பரத்தில் இருவரும் ஒன்றாக நடிக்கவே அங்கிருந்து காதல் மலர்ந்தது. பின்பு இருவரும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இணைந்து பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். சமீபத்தில் விராட் கோலிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. மேலும் விராட் கோலி விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் காண அனுஷ்கா ஷர்மா மைதானத்திற்கு வருவார்.
விராட் கோலி சொத்து மதிப்பு
விராட் கோலி தனது சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு ஏற்ற சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவருக்கு மும்பை மற்றும் டெல்லியில் ஆடம்பரமான வீடுகள் உள்ளது. விளையாடும் நேரத்தை தவிர்த்து அவர் தனது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தரமான நேரத்தை செலவிடுகிறார். மேலும் பல சொகுசு கார்களை வாங்கி குவித்துள்ளார். ஆடி, லம்போர்கினி, பென்சு உள்ளிட்ட சொகுசு கார்கள் விராட் கோலியிடம் உள்ளது. மும்பை, டெல்லியை தவிர விராட் கோலிக்கு இந்தியா முழுவதும் பல ஆடம்பர சொத்துக்கள் உள்ளன, இதில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் அடங்கும். மும்பையில் சுமார் 34 கோடி மதிப்பில் ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பை வைத்துள்ளார். கிரிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானத்தை தவிர பல பிராண்டுகள் மூலம் அவருக்கு வருமானம் வருகிறது. விராட் கோலியின் சொத்து மதிப்பு 126 மில்லியன் டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க - இதுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் யார் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ