எலோன் மஸ்கின் X தளத்தை விட இன்ஸ்டாகிராம் தான் எனக்கு விருப்பம்-எம்.எஸ். தோனி வைரல் வீடியோ

Instagram vs X -MS Dhoni: நான் ஏன் அங்கு இருக்க வேண்டும்?'' எ,.எஸ் தோனி ஏன் எக்ஸ் (X) தளத்தை விட இன்ஸ்டாகிராமை அதிகம் விரும்புகிறார் என்பதை குறித்து அவர் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 21, 2024, 02:36 PM IST
  • சமூக வலைதளங்களில் வைரலாகும் எம்.எஸ். தோனியின் வீடியோ
  • எம்.எஸ். தோனிக்கு இன்ஸ்டாகிராமில் 48 மில்லியன் ஃபாலோவர்ஸ்
  • எம்.எஸ். தோனிக்கு எக்ஸ் (X) தளத்தில் 8.6 மில்லியன் மக்கள் பின்தொடர்கின்றனர்.
எலோன் மஸ்கின் X தளத்தை விட இன்ஸ்டாகிராம் தான் எனக்கு விருப்பம்-எம்.எஸ். தோனி வைரல் வீடியோ title=

MS Dhoni Prefer Instagram over X: எம்.எஸ். தோனி தனக்கு விருப்பமான சமூக ஊடக தளமாக எக்ஸ் (X) ஐ விட இன்ஸ்டாகிராம் (Instagram) இருப்பதாகக் கூறியுள்ளார். துபாயில் ஒரு விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற 42 வயதான எம்.எஸ். தோனி 'எக்ஸ்' (X) மீதான தனது கோவத்தை வெளிப்படுத்தினர். 'எக்ஸ்' தளத்தில் எதுவுமே நல்லது நடக்கவில்லை என்று நான் நம்புகிறேன். குறிப்பாக அங்கு சர்ச்சை ஏற்படுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளார். அதுக்குறித்து பார்ப்போம்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் எம்.எஸ். தோனியின் வீடியோ

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மகேந்திர சிங் தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், கேப்டன் கூல் என அழைக்கப்படும் எம்.எஸ். தோனி சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம் (Instagram) மிகவும் சிறந்தது எனக் கூறியுள்ளார். மேலும் அவர் எக்ஸ் (X) தளத்துக்குப் பதிலாக இன்ஸ்டாகிராம் (Instagram) அதிகமாக விரும்புவதாகக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் எம்.எஸ். தோனிக்கு எதிராக வதந்திகள் பரப்பி வருகின்றன.

"எக்ஸ்'ஐ விட இன்ஸ்டாகிராமில் தான் எனக்கு விருப்பம், 'எக்ஸ்' தளத்தில் எதுவுமே நல்லது நடக்கவில்லை என்று நான் நம்புகிறேன். குறிப்பாக அங்கு சர்ச்சை ஏற்படுத்தப்படுகிறது. யாரோ எதையாவது எழுதி அதை சர்ச்சையாக மாற்றுவார்கள். நான் ஏன் அங்கு இருக்க வேண்டும்? அது உங்களுக்குத் தெரியும் என்று தோனி கூறினார்.

எனவே, நான் அங்கு இல்லை-இல்லை அது எனக்கானது அல்ல. நான் இன்னும் இன்ஸ்டாகிராம் தளத்தை விரும்புகிறேன், ஏனென்றால் நான் ஒரு படம் அல்லது வீடியோவை பகிர்ந்த பிறகு விட்டு விடுவேன். ஆனால் அதுவும் தற்போது மாறி வருகிறது. நான் இன்னும் இன்ஸ்டாகிராமை விரும்புகிறேன் என்றார்.

 

மகேந்திர சிங் தோனிக்கு எக்ஸ் (X) தளம் மீது கோபமா?

எலோன் மஸ்க்கின் எக்ஸ் (X) தளத்தின் மீது மகேந்திர சிங் தோனி கோபமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்து கூறிவருகின்றனர். 

அத்நேரத்தில் எம்.எஸ். தோனிக்கு இன்ஸ்டாகிராம் அதிகம் பிடிக்க என்ன காரணம் மற்றும் எக்ஸ் தளத்தை ஏன் அவர் அதிகமாக விரும்புவதில்லை என்பதைக் குறித்து அவர் எதுவும் கூறவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இது தவிர சமூக வலைத்தள பயனாளிகள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க - தோனி ஓய்வு எப்போது? 4 மாதம் டைம் சொன்ன தல - எதுக்கு தெரியுமா?

எம்.எஸ். தோனிக்கு இன்ஸ்டாகிராமில் 48 மில்லியன் ஃபாலோவர்ஸ்

மகேந்திர சிங் தோனி இன்ஸ்டாகிராமில் மிகவும் குறைவாக செயல்படுகிறார் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இன்ஸ்டாகிராமில் மஹியின் கடைசி பதிவு சுமார் 9 மாதங்களுக்கு முன்பு போடப்பட்டது.  அப்படி இருக்கும் நிலையில், இன்ஸ்டாகிராம் தளம் எக்ஸ் (X) ஐ விட சிறந்தது என்று அவர் கருதுகிறார். 

இதையடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து லாஜிக் போட்டு வருகின்றனர். முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனிக்கு இன்ஸ்டாகிராமில் 48 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கிறார்கள். இதுவரை அவர் 109 பதிவுகளைப் பகிர்ந்துள்ளார். அதே நேரத்தில், 8.6 மில்லியன் மக்கள் மஹியை எக்ஸ் (X) இல் பின்தொடர்கின்றனர்.

ஐபிஎல் 2024 சீசனில் இருந்து வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்

சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்தது. இந்த தோல்விக்கு பிறகு ஐபிஎல் 2024 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயணம் முடிவுக்கு வந்தது. அதே நேரத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நான்காவது அணியாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.

மேலும் படிக்க - RCB vs CSK : வெயிட் பண்ண வச்ச ஆர்சிபி அணி! கடுப்பாகி கிளம்பி போன தோனி - இதுதான் உண்மை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News