விராட் கோலியை இந்திய அணிக்குள் வந்த கதையை அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்
இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் பல தகர்க்க முடியாத சாதனைகளை எல்லாம் படைத்திருக்கிறார்.
ஆனால் அவர் முதன்முதலாக இந்திய அணிக்குள் வருவதற்கு தோனி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். விராட் கோலிக்கு பதிலாக பத்ரிநாத்தை எடுக்கவே ஆர்வம் காட்டியிருக்கிறார்.
இருப்பினும் அப்போதைய தேர்வுக்குழு தலைவராக இருந்த வெங்கசர்க்கார் விராட் கோலியை இந்திய அணிக்குள் கொண்டுவர மிகவும் விரும்பியிருக்கிறார். ஆனால் இந்த விஷயம் பலருக்கும் தெரியும்.
இதற்கு முன்பு இந்திய அணியின் இளையோருக்கான கிரிக்கெட்டில் விராட் கோலி வருவதற்கு உதவியர் சுரேஷ் ரெய்னா.
எமர்ஜிங் பிளேயர் கிரிக்கெட்டில் இந்திய அணியில் முதன்முதலாக கேப்டனாக இருந்து விராட் கோலியை ஆட வைத்தாராம்
அங்கிருந்து தான் விராட் கோலியின் கிரிக்கெட் பயணமே இந்திய சீனியர் அணியை நோக்கி பயணிக்க தொடங்கியிருக்கிறது.
அதன்பிறகு மெல்ல மெல்ல தன்னுடைய திறமையான விளையாட்டால் இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பையும் ஏற்று வழிநடத்திய விராட் கோலி, ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார்.
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்திருக்கிறார் அவர்.