கிராமங்களில் வயல் வரப்புகளில் துள்ளி திரியும் ஹீரோயின்களை நாம் ரசித்திருப்போம். பிழைப்பிற்காக வயலுக்கு அடுக்குப் பானைகளில் சோறு கொண்டு செல்லும் பாட்டிகளை நாம் பார்த்திருப்போம். மறுபுறம் நகரங்களில் சர்கஸ் நடத்தப்படும்போது அதில் ஜோக்கர்கள் சைகிள் ஓட்டி பார்த்திருப்போம், கிளி சைகிள் ஓட்டி கூட பார்த்திருப்போம். அதேபோல நம் தெருக்களில் சிறுவர்கள் கைகளைவிட்டு சைகிள் ஓட்டுவதையும் பார்த்திருப்போம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் இங்கு ஒருவர் தலை மீது அவரது உருவத்தைக் காட்டிலும் மிகப் பெரிய மூட்டை ஒன்றை வைத்துக்கொண்டு இரு கைகளையும் மூட்டையை பிடித்தவாறு செல்கிறார். அதும் நீண்ட தூரம் செல்கிறார். நடந்து அல்ல, சைகிளை மிதித்து. அதிவேகமாக செல்லும் அவரது சைகிள் வளைவுகளில் அருமையாக திரும்புகிறது, கைகளின் உதவி இல்லாமல்.


சற்றும் பிசுறுதட்டாமல் வளைந்து வளைந்து செல்லும் அவரது சைக்கிள் உண்மையிலேயே ஆச்சரியப்படவைக்கிறது.


மேலும் படிக்க | கொடிய நாகப்பாம்பை கூலாக காப்பாற்றிய நபர்: இணையத்தில் வைரல் ஆன வீடியோ 


இவரது இந்த சாகசத்தை பின்னால் வந்த காரில் அமர்ந்தபடி ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில் அவரது நேர்த்தியான, நிலை தடுமாறாத சைகிள் ஓட்டும் திறனை பலர் பாராட்டி வந்தால், அந்த ஊர் கவுன்சிலரின் பெருமையைப் பிறர் பாராட்டி வருகின்றனர்.


 



 


இந்த பதிவை வெளியிட்டவர், "வாழ்க்கை மிகவும் அழகானது ஆனால் நிபந்தனைக்கு உட்பட்டது" என்று எழுதி பதிவிட்டுள்ளார்.




அதற்கு பதிலளிக்கும் விதமாக சிலர், "சீரான ரோடு இருந்தால் வாழ்க்கை அழகானது தான்!" என கமெண்ட் செய்துள்ளது பார்ப்பவர்களின் முகத்தில் புன்னகையைப் பூக்கச்செய்கிறது. ஆகமொத்தம் சைக்கிள் ஓட்டுபவர், ஊருக்கு ரோடு போட்டவர் என இருவரும் பாராட்டுக்கு உரியவர்கள் தான்!


மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR