கொடிய நாகப்பாம்பை கூலாக காப்பாற்றிய நபர்: இணையத்தில் வைரல் ஆன வீடியோ

Viral Video: கிணற்றில் சிக்கிய நாகப்பாம்பை தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றும் ஒரு நபரின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 28, 2022, 04:54 PM IST
  • கிணற்றில் தவறி விழுந்த நாகப்பாம்பு.
  • நாகப்பாம்பை காப்பாற்றிய மனிதர்.
  • வைரல் ஆன வீடியோ.
கொடிய நாகப்பாம்பை கூலாக காப்பாற்றிய நபர்: இணையத்தில் வைரல் ஆன வீடியோ  title=

நாகப்பாம்பு வைரல் வீடியோ: பாம்புகளைக் கண்டால் படையும் நடுங்கும், பலசாலிகளும் பதுங்குவார்கள். பாம்பின் பெயரைக் கேட்டாலே நடுங்கும் நபர்கள்தான் எராளம். 

ஆனால், வித்தியசமான சிலரும் இருக்கிறார்கள். எலியையும், பல்லியையும் பார்த்து அச்சப்படும் சிலர், பாம்புகளை பார்த்து பயப்படுவதில்லை. ஆனால், அப்படிப்பட்டவர்களும், நாகப்பாம்பை பாத்து அஞ்சாமல் இருக்க மாட்டார்கள். நாகப்பாம்பு உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 

இந்நாட்களில் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இந்த வீடியோவில் ஒரு நபர் யாரும் எண்ணிக்கூட பார்க்க முடியாத ஒரு விஷயத்தை செய்கிறார். 

கிணற்றில் இருந்து ஆபத்தான பாம்பை காப்பாற்றும் மனிதர்

வைரலான இந்த வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது. ஆழமான கிணற்றில் ஆபத்தான நாகப்பாம்பு சிக்கியிருப்பதை வீடியோவில் காண முடிகிறது. ஒரு நபர் இந்த நாகப்பாம்பை காப்பாற்ற தன் உயிரையும் பணயம் வைப்பதை வீடியோவில் காண முடிகின்றது. கிணற்றில் உள்ள நாகப்பாம்பைக் அந்த நபர் காப்பாற்றுவதை வீடியோவில் காணலாம். அந்த வீடியோவை பார்த்தவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். 

மேலும் படிக்க | பரம எதிரிகளான ராஜநாகமும் கீரிப்பிள்ளையும் சந்தித்துக்கொண்டால் என்ன நடக்கும்? வீடியோ வைரல் ஆகும் 

அந்த நபர் அவசரப்படாமல் மிகவும் பொறுமையாக நாகப்பாம்பை மீட்பதை வீடியோவில் காண முடிகிறது. அவர் ஒரு கயிற்றின் உதவியுடன் பாம்பை கிணற்றிலிருந்து வெளியே எடுக்கிறார். இதற்குப் பிறகு, அவர் அதே பொறுமையுடன் அந்த பாம்பை பையில் விடுகிறார். அந்த நபர் பாம்பை அகற்றும் போது எந்தவித பாதுகாப்பு உபகரணமும் அணியாமல் இருப்பதை வீடியோ-வில் காணலாம். அவர் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் நாகப்பாம்பை மீட்டெடுக்கிறார். 

நெஞ்சை பதபதைக்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த வீடியோ மகாராஷ்டிராவில் இருந்து வெளியாகியுள்ளது

அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தரும் இந்த வீடியோ மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் எடுக்கப்படதாக கூறப்படுகிறது. ஊடக அறிக்கையின்படி, அரசு சாரா வனவிலங்கு ஆராய்ச்சி அமைப்பின் தன்னார்வலர்களால் நாகப்பாம்பு மீட்கப்பட்டது. 

இரும்பு வளையத்தைக் கயிற்றில் கட்டி அந்த நபர் பாம்பை வெளியே எடுப்பதை வீடியோவில் காண முடிகிறது. பாம்பும் அந்த வளையத்தில் லாவகமாக சுற்றிக்கொண்டு மேலே வருகிறது. 

அந்த நபர் மனிதாபிமான அடிப்படையில் பாம்பை மீட்டிருந்தாலும், அவரது இந்த செயல் அவருக்கே ஆபத்தாக முடிந்திருக்கலாம் என இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News