மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. அதன்படி ஜூலை முதல் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் 4 சதவீதம் உயர்த நிர்ணயிக்கப்படும் என நம்பப்படுகிறது. பணவீக்க தரவு வெளியான பிறகு, டிஏவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஜனவரி-பிப்ரவரி மாத தரவுகளின் அடிப்படையில், ஜூலையில் டிஏ அதிகரிப்பு இருக்காது என்று அஞ்சப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

5% அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது
இந்த நிலையில் ஏப்ரல் 2022 இல் வெளியிடப்பட்ட ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கையிலிருந்து, அகவிலைப்படியில் (டிஏ உயர்வு) குறைந்தபட்சம் 4% அதிகரிப்பு இருக்கும் என்பது தெளிவாகிறது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் வேகமாக அதிகரித்த குறியீட்டெண், டிஏ இல் 5% அதிகரிப்பு இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், 4 சதவீதத்திற்கும் அதிகமானவை மே 2022 இன் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும்.


மேலும் படிக்க | Aadhaar Card உண்மையானதா, போலியானதா? கண்டுபிடிப்பது எப்படி


ஏப்ரல் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீடு
மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாத ஏஐசிபிஐ குறியீட்டில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது மார்ச் மாதத்தில் 126 புள்ளிகளில் இருந்து 2022 ஏப்ரலில் 127.7 ஆக அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் 1.7 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பணவீக்கம் மார்ச் மாதத்தில் 126 ஆகவும், பிப்ரவரியில் 125 ஆகவும் இருந்தது. பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் வரை குறியீட்டு எண் 2.7 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ உயர்வு) உயர்த்தப்படுகிறது.


டிஏ எவ்வளவு இருக்கும்
ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை மார்ச் மாதம் உயர்த்தி அரசு அறிவித்தது. அப்போது அரசாங்கம் அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தியது. இதனுடன், ஊழியர்களுக்கு மூன்று மாத நிலுவைத் தொகை வழங்குவது குறித்தும் பேசப்பட்டது. இப்போது அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தினால், அகவிலைப்படி 38 சதவீதமாக உயரும்.


குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் உள்ளவர்களுக்கு எவ்வளவு நன்மை


1. பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000


2. தற்போதுள்ள அகவிலைப்படி (34%) மாதம் ரூ.6120


3. புதிய அகவிலைப்படி (38%) மாதம் ரூ.6840


4. அகவிலைப்படி உயர்வு 6840- 6120 = மாதம் ரூ.720


5. ஆண்டுக்கு எவ்வளவு லாபம் 720X12 = ரூ 8640


அதிகபட்ச அடிப்படை உள்ளவர்களுக்கு எவ்வளவு நன்மை வழங்கப்படும்


1. பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ 56900


2. தற்போதுள்ள அகவிலைப்படி (34%) மாதம் ரூ 19346


3. புதிய அகவிலைப்படி (38%) மாதம் ரூ 21622


4. அகவிலைப்படி அதிகரிப்பு 21622-19346 = மாதம் ரூ 2276


5. ஆண்டுக்கு எவ்வளவு லாபம் 2276 X12 = ரூ 27,312


மேலும் படிக்க | குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டு கடன்களை வழங்கும் வங்கிகள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR