பரபரப்பான இந்த உலகில், பலருக்கு தூக்கம் என்பதே எட்டாக்கணியாக உள்ளது. உடல் அலைச்சல் இருந்தும், மிகவும் சோர்வான நிலையிலும் பலர் இரவில் தூக்கம் வராமல் அவஸ்தை படுகின்றனர். சராசரியாக, ஒரு நபர் இரவில் தூங்குவதற்கு சுமார் 10 முதல் 20 நிமிடங்கள் தேவைப்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், உலகில் உள்ள 70 மில்லியன் பேர், சரியான தூக்கம் இல்லாமல் அவஸ்தை படுவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூக்கமின்மைக்கான காரணங்கள்..


மனநலம் அல்லது உடல் நலனில் பிரச்சனை ஏற்பட்டிருந்தால் இரவில் தூங்குவதற்கு நேரம் ஆகலாம். காலையில் சீக்கிரம் எழும் பழக்கம் இல்லாதவர்களுக்கு இரவில் சீக்கிரமாக தூக்கம் வராமல் இருக்கலாம். ஒரு சிலர் மன அழுத்தம் காரணமாக இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுவர். படுத்தவுடன் 30 நிமிடங்களுக்கு மேல் ஆகியும் தூங்க முடியாதவராக இருந்தால் உங்களது நோயெதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். அறிவாற்றல் திறன், வளர்ச்சிதை மாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் உடலில் தேவையற்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. படுதத்த பத்தே நிமிடங்களில் தூங்க..இதோ சில ஈசி டிப்ஸ்..


மேலும் படிக்க | தொள தொள தொப்பை.. மளமளன்னு குறையணுமா? அப்போ இந்த மேஜிக் விதைகளை சாப்பிடுங்க


படுத்த பத்தே நிமிடத்தில் தூக்கம்..டிப்ஸ் என்ன?


>யோகாசன பயிற்சிகள் நமக்கு உடல் மற்றும் மன நலனை மேம்படுத்த எளிமையான முறையில் கிடைத்திருக்கும் வரபிரசாதமாகும். ஆதலால் இஅவில் சீக்கிரமாக தூக்கம் வருவதற்கு சில யோகாசனங்களை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சேது பந்தாசனம், பாலாசன, சவாசனம், சப்த பத்த கோனாசனம் போன்ற ஆசனங்கள் செய்வதற்கு எளிதாகவும் இரவில் விரைவாக தூக்கத்தை வரவழைப்பதாகவும் இருக்கின்றன. 


>மனதை அமைதிப்படுத்துவதும் தூக்கம் வரவழைப்பதற்கான எளிய முறையாகும். எனவே படுக்க செல்வதற்கு முன்னர் உங்கள் மனதை அலைபாய வைக்கும் செயல்கள் எதையும் செய்யாதீர்கள். உதாரணத்திற்கு, இரவில் அதிகமாக செல்போன் உபயோகிப்பது, மெசஜ் செய்து விட்டு ரிப்ளைக்காக காத்திருப்பது போன்றவற்றை குறிப்பாக செய்யாதீர்கள். மனதை ரிலாக்ஸ் செய்யும் வகையிலான இசை அல்லது பாடல்களை கேட்கலாம். பிடித்த புத்தகத்தை மீண்டும் படிக்கலாம். இதனால் உங்கள் மனது சாந்தியடையும். சீக்கிரமாக தூக்கம் வரும். 


>நாம் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் அட்டவனை போடுவது அந்த வேலையை விரைவாக முடிக்கவும் சரியாக குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கவும் உதவும். தூக்கத்திற்காகவும் நாம் ஒரு குறிப்பிட்ட அட்டவனையை போட்டுக்கொள்ளலாம். எந்த வேலையாக இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்க சென்று விடுங்கள். இதற்கு ‘சர்க்காடியன் ரிதம்’ என்று பெயர். இதே முறையை நீங்கள் பின்பற்றி வந்தால் கண்டிப்பாக அது உங்களுக்கு பழக்கமாகி சீக்கிரமே தூங்குவதற்கு வழி வகுக்கும். 


>உணவு முறைகளுக்கும் நமது தூக்கத்திற்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் திடமான அல்லது காரமான உணவுகளை தவிர்க்கவும். அவை நம் உடலில் அசௌகரியத்தை ஏற்படுத்தவல்லது. காபி, டீ குடிப்பதாலும் தூக்கம் வரவழைப்பது கடினமாகும். எனவே, இதன் உட்கொள்ளலையும் தவிர்த்து விடுங்கள். இரவு உணவையும் லேசான, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய வகையில் எடுத்துக்கொள்ளுங்கள். இதனால் படுத்தவுடன் குழந்தை போல உறங்கி விடுவீர்கள். 


>உடலுக்கும் மனதிற்கும் அலைச்சல் அல்லது அலுப்பு கொடுக்கும் நாட்களில், இரவில் சூடான குளியல் ஒன்றை போடுங்கள். மிதமான சூட்டில் இருக்கும் அந்த தண்ணீரில் குளிப்பதால் உங்கள் தசைகள் அமைதியாகும். உடல் சோர்வு நீங்கி, மனம் புத்துணர்ச்சி பெரும். இது நல்ல உறக்கத்திற்கும், உடலை தூய்மையாக வைத்திருக்கவும் உதவும். 


மேலும் படிக்க | பல்வலி பாடாய் படுத்துதா..? சரிசெய்ய ‘இந்த’ சமையலறை பொருட்களை யூஸ் பண்ணுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ