இன்றைய ராசிபலன், 25 மே 2021: எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும்
சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு கலை. இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.
புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு கலை. இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.
இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே..
இன்றைய நாளுக்கான உங்கள் ராசிபலன் எப்படி உள்ளது? உங்கள் அதிர்ஷ்ட எண், நிறம் என்ன? இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Also Read | தமிழ் பஞ்சாங்கம் 25 மே, 2021: வைகாசி 11ஆம் நாள்; செவ்வாய்க்கிழமை
ராசிபலன் - 25-05-2021
மேஷம்:
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கெளரவ பதவிகளால் கீர்த்தி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும்.
ரிஷபம்:
திடீர் யோகத்தால் தனவரவுகள் உண்டாகும். பங்காளிகளால் ஏற்பட்ட வழக்கு விவகாரங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். சுயதொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பொருட்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்:
தொழில் சார்ந்த எண்ணங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். பதவி உயர்வு கிடைப்பதற்கான சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். பொதுக்கூட்ட பேச்சுக்களால் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் உதவிகளால் தொழிலில் மேன்மை உண்டாகும். நிர்வாகம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும்.
கடகம்:
தீர்ப்புகளில் சாதகமான எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இழுபறியான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். வாகனப் பயணங்களில் கவனத்துடன் செல்லவும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும்.
Also Read | இன்ஸ்டாகிராமை கலக்கும் 77 வயது மூதாட்டி: அதிரடி டான்ஸ், அசத்தும் லுக்ஸ்!!
சிம்மம்:
பணிகளில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை தைரியத்துடன் சமாளிப்பீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். இளைய உடன்பிறப்புகளின் மூலம் சாதகமான சூழல் அமையும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.
கன்னி:
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வர்த்தக பணிகளில் லாபம் உண்டாகும். கூட்டாளிகளிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். கால்நடைகளின் மூலம் லாபம் உண்டாகும்.
துலாம்:
போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வி பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சகம்:
உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பணி தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எடுத்த செயலை முடித்து காட்டுவதன் மூலம் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் தொழில் சம்பந்தமான சில நுணுக்கங்களை கற்பீர்கள்.
Also Read | "toolkit" விவகாரம்; ட்விட்டர் இந்தியா நிறுவனத்தில் தில்லி போலீஸார் சோதனை
தனுசு:
மனதில் புதிய பொருட்களை வாங்குவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். சுயதொழில் புரிபவர்களுக்கு இருந்துவந்த பணச்சிக்கல்கள் நீங்கும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். புதிய நபர்களின் நட்புகளால் தனலாபம் அடைவீர்கள்.
மகரம்:
குடும்பத்தின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சங்கீத இசைக் கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும். பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். போட்டிகளில் ஈடுபடும்போது கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்:
எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். மறைப்பொருள் சம்பந்தமான ஞானத் தேடல் உண்டாகும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளால் உங்களின் மீதான மதிப்புகள் உயரும். மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் அமையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
மீனம்:
உறவினர்களால் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் பேசும்போது கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். எண்ணங்களின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும்.
Also Read | உடலை பொன்னிறமாக்கும் பொன்னாங்கண்ணி கண்களுக்கு ஒளியூட்டும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR