நூடுல்ஸ் எப்போதும் அவற்றின் சுவை மற்றும் தயாரிக்கப்படும் செய்முறைக்காக பிரபலமானது. எனினும், நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட முழு அடைப்பு காரணமாக அவற்றின் தேவையை அதிகரித்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி உள்பட வடநாட்டின் பல பகுதிகளில் நூடுல்ஸ் தட்டுபாடில் இருப்பது குறித்து கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாவதையும் நாம் பார்த்து வருகிறோம். இந்நிலையில் நாட்டின் தலைநகர் புதுடெல்லியில், சில்லறை விற்பனையாளர்களுக்கான நூடுல்ஸ் பங்கு குறைந்துவிட்டதாக, விற்பனையாளர்கள் கூறியுள்ளனர், அதே நேரத்தில் அதன் தேவையும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து புதுடெல்லி மொத்த விற்பனையாளர் திரிவேணி வர்த்தக நிறுவனத்தின் இயக்குனர் ஆயுஷ் தெரிவிக்கையில், "நூடுல்ஸின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது. மேகியின் சில்லறை விற்பனையாளர்கள் பங்கு பெருமளவு குறைந்துள்ளது." என்று கூறினார். 


டெல்லியில் வர்த்மான் டிரேடிங்கின் ஜிதேந்திர நூடுல்ஸ் பற்றிய பிரச்சினை என்னவென்றால், அதன் விநியோகஸ்தர்கள் சாதாரண கட்டணங்களை விட அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார். "விநியோகஸ்தர்கள் பொருட்களைப் பெற்றாலும், பல விநியோகஸ்தர்களிடன் இருந்து சில்லறை விற்பனையாளர்கள் அதை வாங்க விரும்பவில்லை என்று கூறுகின்றனர். மேகி பாக்கெட்டின் MPR ரூ.12 ஆகும், ஆனால் விநியோகஸ்தர்கள் இதில் ரூ.11.90 கோருகிறார், ஆக., சில்லறை விற்பனையாளர்களுக்கு 10 பைசாக்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இப்படி இருக்கையில் சில்லறை விற்பனையாளர்கள் எப்படி வாங்குவார்கள்?" எனவும் கேள்வி எழுப்புகின்றார்.


கடந்த மாதம், மேகி தயாரிப்பாளரான நெஸ்லே, உணவு மற்றும் குளிர்பான பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் நிறுவனம் செயல்படுவதாகக் தெரிவித்தது. நிறுவனத்தின் தொழிற்சாலைகள் மற்றும் விநியோக மையங்களில் தொடர்ந்து நடவடிக்கைகளை நிறுத்துமாறும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. "நிறுவனம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது, மத்திய மாநில அரசு மற்றும் அதிகாரிகளின் உத்தரவுப்படி அவ்வப்போது தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று நிறுவனம் கூறியிருந்தது. எனினும் விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு இடையே நிகழும் வர்தக மோதல்களை கவனிக்க மறந்துவிட்டது.