IRCTC Andaman Package: இந்தியாவில் பார்க்க வேண்டிய அற்புதமனா இடங்கள் பல உள்ளன. அந்தமான் அப்படிப்பட்ட ஒரு இடம். அந்தமான் குடும்பத்துடன் சுற்றுலா செல்லவும் மற்றும் தேனிலவுக்கும் ஏற்ற இடமாகும். இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் அந்தமானில், நீங்கள் பார்க்க வேண்டிய பல அழகான இடங்களைக் காணலாம், குறிப்பாக கடற்கரைகள்மிகவும் புக பெற்றவை. திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள், தேனிலவுக்கு இங்கு வர விரும்புகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தமானில் 300க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. கண்கவர் கடற்கரைகளை கொண்ட பார்ப்பதற்கும் இனிமையாகவும், புதுமையான அனுபவத்தையும் தரும் விதமாக இருக்கும் அந்தமான் தீவுகளுக்கான ஐஆர்சிடிசி வழங்கும் சுற்றுலா பேக்கேஜ் பற்றி தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய காலகட்டத்தில், கோவா, மாலத்தீவுகளை விட, அந்தமான் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களுக்குச் செல்ல விரும்புகிறார்கள். அந்தமானில், நீங்கள் மனதை கொள்ளை கொள்ளும் பல அழகான இடங்களைப் பார்க்க முடியும் . நீங்கள் இந்த மாதம் அந்தமான் செல்ல திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஐஆர்சிடிசி அந்தமான் தொடர்பாக ஒரு சிறப்பு டூர் பேக்கேஜை (IRCTC ANDAMAN Tour Package) அறிமுகப்படுத்தியுள்ளது.


அந்தமான் சுற்றுலா செல்ல இன்றே திட்டமிடுங்கள்


நீங்களும் அந்தமானுக்குச் செல்ல விரும்புகிறீர்களா... அதற்கான ஒரு நல்ல டூர் பேக்கேஜை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், நீங்கள் நிச்சயமாக IRCTC வழங்கும் சிறப்புப் பேக்கேஜ் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் திட்டமாக இருக்கும். 6 இரவுகளும் 7 பகல்களும் கொண்ட இந்த பேக்கேஜின் பெயர் ROMANTIC ANDAMAN HOLIDAYS-GOLD. ஐஆர்சிடிசி ரயில்டிக்கெட்டுகளை புக் செய்யும் தளமாக மட்டுமல்லாமல், பல வித சுற்றுலா இடங்களுக்கு செல்வதற்கான பேக்கேஜ்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.


அந்தமான் பேக்கேஜ்


ஏசி அறையில் தங்கும் வசதியுடன் ஐஆர்சிடிசி அந்தமான் பேக்கேஜில் நீங்கள் போர்ட் பிளேயருடன் ஹேவ்லாக் மற்றும் நைலையும் பார்க்கலாம். இது தவிர, ஹோட்டலின் ஏசி அறையில் நீங்கள் தங்குவதற்கான வசதிகளும் பேக்கேஜில் அடங்கும். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படும். இது தவிர, அங்குள்ள இடங்களை சுற்றி பார்ப்பதற்கான இடங்களுக்கான நுழைவு அனுமதி, நுழைவுச் சீட்டு, படகு டிக்கெட் மற்றும் வனப் பகுதி அனுமதி ஆகியவையும் தொகுப்பில் அடங்கும். அனைத்து வகையான ஆடம்பர மற்றும் போக்குவரத்து வரிகளும் இந்த தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | மதுரை டூ பத்ரி - கேதார்நாத்... IRCTC வழங்கும் பாரத் கவுரவ் யாத்திரை பேக்கேஜ்..!!


அந்தமான் பேக்கேஜ் கட்டண விபரம்


இப்போது இந்த பேக்கேஜின் கட்டணம் என்ன என்பதைச் அறிந்து கொள்ளலாம். இந்த பேக்கேஜின் அதிகபட்ச கட்டணம் ரூ.57,230, இது ஒருவருக்கு மட்டுமே. இரண்டு பேர் செல்லும் நிலையில், இந்த பேக்கேஜை ஷேர் செய்து முன்பதிவு செய்ய விரும்பினால், அவர்கள் ரூ.33,600 செலுத்த வேண்டும். அதேபோல், மூன்று பேருக்கான கட்டணம் ரூ.30,515 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பேக்கேஜில் ஒரு குழந்தைக்கான கட்டணம் ரூ.19,810 முதல் ரூ.15,650 வரை இருக்கும். அதேசமயம், குழுவாக (4 பேர்) இந்த தொகுப்பை முன்பதிவு செய்தால், ஒவ்வொரு பயணிக்கும் கட்டணம் ரூ.30,525 ஆக இருக்கும். 6 பேர் கொண்ட குழுவில் ஒவ்வொரு பயணிக்கும் பேக்கேஜ் விலை ரூ.28,970.


நீங்கள் பேகேஜை பெற முன்பதிவு செய்ய விரும்பினால், அதை இரண்டு வழிகளில் பதிவு செய்யலாம். பேக்கேஜை முன்பதிவு செய்வதற்கான எளிதான மற்றும் விரைவான வழி ஆன்லைனில் உள்ளது, ஐஆர்சிடிசி இணையதளத்திற்குச் சென்று இந்தத் தொகுப்பை முன்பதிவு செய்யலாம். இந்த தொகுப்பை ஆஃப்லைனில் முன்பதிவு செய்ய, நீங்கள் IRCTC அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.


மேலும் படிக்க | வெளிநாடு டூர் இனி எளிது தான்... IRCTC வழங்கும் சில வெளிநாட்டு பேக்கேஜ்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ