IRCTC Foreign Tour Packages: இன்றைய கால கட்டத்தில் உள்ளூர் மட்டுமல்ல வெளிநாட்டிற்கான பயண பேக்கேஜ் மூலம், குறைந்த செலவில் பயணம் செல்லலாம் என்பதால், நடுத்தர வர்க்கத்தினரும் வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் செல்ல திட்டமிடுகிறார்கள். சுற்றுப்பயணத் திட்டங்கள் அவரவர் பட்ஜெட்டுக்கேற்ப இருக்கும். பலரால் தங்களின் பட்ஜெட்டைக் கருத்தில் கொண்டு தாங்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலை மாறி வருகிறது.
வெளிநாட்டு சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. IRCTC வெளிநாடுகளுக்கான பல பேகேஜ்களை வழங்கி வருகிறது. அதில், நேபாளத்தில் உள்ள காட்மண்டு மற்றும் இந்தோனேஷியாவின் பாலி செல்வதற்கான பேக்கேஜ் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
கடந்த சில ஆண்டுகளில், காத்மாண்டு மற்றும் பாலி ஆகியவை இந்தியர்கள் பார்க்க வேண்டிய இடங்களில் முதல் தேர்வாகக் காணப்படுகின்றன. பல புதுமணத் தம்பதிகள் தங்களுடைய தேனிலவை அங்கே திட்டமிடுகிறார்கள். இந்த இடங்களுக்குச் செல்ல நீண்ட நாட்களாகத் திட்டமிடுபவர்களும் உள்ளனர். அத்தகையவர்களுக்கு IRCTC ஒரு சிறந்த வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது.
உங்கள் வெளிநாட்டுப் பயணக் கனவை நிறைவேற்றும் பல சிறந்த பேக்கேஜ்களை IRCTC கொண்டுள்ளது. அத்தகைய சில பேகேஜ்களின் விபரங்களை அறிந்து கொள்ளலாம்:
IRCTC காத்மாண்டு பேக்கேஜ் (IRCTC Kathmandu package)
நேபாளத்தின் காட்மண்டு செல்வதற்கான இந்த பேக்கேஜின் பெயர் BEST OF NEPAL EX DELHI (NDO04). இந்த தொகுப்பை ஜூன் 15 ஆம் தேதிக்கு முன்பதிவு செய்யலாம். இந்த முழுமையான தொகுப்பு 5 இரவுகள் மற்றும் 6 நாட்கள் ஆகும். நேபாள ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லியில் இருந்து காத்மாண்டு செல்லலாம். இரண்டு நபர்கள் இணைந்து பயணம் செய்ய ஒரு நபருக்கு பேக்கேஜ் கட்டணம் 37000 ரூபாய். இந்த பேக்கேஜில் உணவு வசதி இல்லை. ஆனால், ஹோட்டலில் தங்கும் வசதி, சுற்றிப் பார்க்க வாகனம் மற்றும் விமானத்தில் செல்வதற்கான கட்டணம் ஆகியவை அடக்கம். இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று இந்த பேக்கேஜை யார் வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம்.
IRCTC பாலி பேக்கேஜ் (IRCTC Bali Package)
IRCTC ஆனது Blissful Bali Ex Kolkata என்ற பெயரில் ஒரு அற்புதமான பாலி டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. பாலிக்கு நீங்கள் கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் செல்ல வேண்டும். ஒருவருக்கு ரூ.95,100 கட்டணம், இரண்டு பேர் சேர்ந்து சென்றால், ஒவ்வொருவரும் ரூ.81,700 செலுத்த வேண்டும். பாலி டூர் பேக்கேஜ் மொத்தம் 6 பகல் மற்றும் 5 இரவுகள். இந்த பேக்கேஜில் கீழ், கொல்கத்தாவில் இருந்து பாலிக்கு பயணம் செய்வது, மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்குவது, வாகனம் மற்றும் உணவு மூலம் பயணம் செய்வது இலவசம். ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கான இந்த பேஎகேஜிற்ஆஆணா முன்பதிவு தொடங்கிவிட்டது.
மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
ஐஆர்சிடிசியின் இந்த இரண்டு அற்புதமான பேக்கேஜ்கள் மூலம், வெளிநாட்டுப் பயணம் செய்யும் உங்கள் கனவை நனவாக்கலாம். இந்த பேக்கேஜ்களை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் முன்பதிவு செய்யலாம். இந்த வசதி முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உள்ளது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் மிகவும் தாமதப்படுத்தினால், நீங்கள் வாய்ப்பை இழக்க நேரிடும்.
மேலும் படிக்க | குறைந்த செலவில் சிங்கப்பூர் - மலேஷியா டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ