மாற்றுத்திறனாளி மாணவருக்கு 47 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானத்தில் வேலை
Employment in Microsoft: 47 லட்சம் ஆண்டு வருமானத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை வாங்கிய மாற்றுத்திறனாளி பட்டதாரி
இந்தூர்: பார்வையற்ற பொறியியல் பட்டதாரி இளைஞருக்கு 47 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானத்தில் வேலை கிடைத்துள்ளது. பார்வையற்ற பொறியியல் பட்டதாரியான யாஷ் சோனகியா, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 47 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானத்தில் வேலை பெற்று சாதனை படைத்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பார்வையற்ற பொறியியல் பட்டதாரியான யாஷ் சோனகியா, 2021ஆம் ஆண்டு இந்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றvஅர்.
யாஷ் சோனகியா, 47 லட்சம் ஆண்டு வருமானத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை பெற்றுள்ளது அனைவருக்கும் மகிச்சியை அளித்துள்ளது.
மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா?
சாதனை மாணவர் யாஷை கல்லூரி நிர்வாகம் நேரில் அழைத்து பாராட்டியுள்ளது. அந்த கல்லூரியில் அதிகளவு ஆண்டு வருமானத்தில் வேலை பெற்ற மாணவர் யாஷ்தான் என்று கல்லூரி நிர்வாகிகள் பெருமிதம் தெரிவித்தனர்.
சிறுவயதிலேயே கண் பார்வையை இழந்த யாஷ், விடாமுயற்சியுடன் படித்து பொறியியல் பட்டம் பெற்றதோடு, மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுனத்திலும் வேலை பெற்றுள்ளார். யாஷின் இந்த சாதனை மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் முன் உதாரணமாக உள்ளது.
மேலும் படிக்க | மருந்தாளுநர் பணிக்கான வாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்
மேலும் படிக்க | பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ