நாடு முழுவதும் தீபாவளி அக்டோபர் 24ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இதேபோல் மாநிலம் முழுவதும் இருந்து மற்ற ஊர்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைதூரங்களுக்கு செல்ல இருக்கும் மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே நம்பியிருக்கின்றனர். முன்பதிவு செய்திருப்பவர்களை தவிர்த்து மற்றவர்கள் பொதுப்பெட்டியில் பயணிக்க வேண்டிய சூழல் இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தீபாவளிக்குப் பின் திருப்பதி போறீங்களா? அப்போ கட்டாயம் இதை படியுங்க


இதனால் தீபாவளிக்கு முந்தைய சில நாட்களில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளில் கூட்ட நெரிசல் அலைமோதும். இந்த நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தென்னக ரயில்வே சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது. தாம்பரம் - திருநெல்வேலிக்கு இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுவதற்கு தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, இந்த சிறப்பு ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 20 அன்று இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலிக்கு செல்லும்


மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06022) இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 21 அன்று மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட ரயில்நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. 


இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டி ஆகியவை இருக்கும்.


மேலும் படிக்க | இனி ஒவ்வொரு ஆண்டும் 2 எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக பெறலாம்: அரசு அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ