Hair Fall Tips: பொதுவாக வெயில் காலங்களில் முடிக்கு போதுமான ஈரப்பதம் இல்லாத காரணத்தினால் முடி சேதமடைந்து முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. ஆனால் மழை காலத்தில் அதிகமான ஈரப்பதத்தாலும் முடி உதிர்தல் தொடர்கிறது. வறண்ட காலநிலை போலவே, அதிகமான ஈரப்பதமும் முடியை அதிகம் சேதப்படுத்தும். எனவே மழை காலத்தில் முடிக்கு கூடுதல் கவனிப்பு அவசியம். சரும பளபளப்பிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பலரும் முடிக்கு கொடுப்பதில்லை. இதனால் முடி உதிர்வு அதிகமாகிறது. மழை காலத்தில் காற்றில் காற்றில் அதிக ஈரப்பதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக தலையில் அதிக எண்ணெய் படிகிறது. இதனை சரி செய்ய ஷாம்பு, கண்டிஷனர் போன்றவற்றை பயன்படுத்தும் போது முடி சேதமடைகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மசாலாக்களில் ரசாயன கலப்பு... புற்றுநோய் அபாயம் குறித்து FSSAI எச்சரிக்கை..!!


மழைக்காலத்தில் முடி பராமரிப்பு


மழைக்கால முடி பராமரிப்பில் கவனம் செலுத்தாமல் பலரும் இந்த தவறுகளை செய்கின்றனர். பலருக்கும் முடி உதிராமலும், நரைக்காமலும் எப்போதும் கருப்பாகவும், அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பருவநிலை மாற்றத்தின் போது சருமம் மற்றும் முடிதான் முதலில் பாதிப்படைகிறது. எனவே இவற்றிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தற்போது வெயில் காலம் முடிவடைந்து மழை காலம் தொடங்கி உள்ளது. இந்த சமயத்தில் பொடுகு மற்றும் அதிகப்படியான எண்ணெய் பிரச்சனை அதிகரிக்கிறது. பொடுகை குறையவில்லை என்றால், முடி கொட்டும் பிரச்சனை அதிகரிக்கும். இதற்கு முக்கிய காரணம் காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பது தான்.


சூடான நீரை பயன்படுத்த வேண்டாம்: மழைக்காலத்தில் குளிர்ந்த காற்று இருக்கும். இதன் காரணமாக தண்ணீர் ஜில்லென்று இருக்கும், எனவே பலரும் குளிப்பதற்கு சூடான நீரை பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த காலகட்டத்தில் சூடான நீரை முடிக்கு பயன்படுத்துவது மிகவும் தவறானது. சூடான நீரை முடிக்கு பயன்படுத்துவது முடி வறட்சியை அதிகரிக்கும். இதன் காரணமாக முடி சேதமடைந்து உதிர தொடங்குகிறது.


முடியை ஹீட் செய்ய வேண்டாம்: பெண்கள் தங்கள் முடியை ஸ்டைலாக மாற்ற முடிக்கு அதிகம் ஹீட்டர் பயன்படுத்துகின்றனர். ஆனால் இதனால் முடி அதிகம் சேதமடைகிறது. மேலும் முடி உதிர்வு அபாயத்தை அதிகரிக்க செய்கிறது. எனவே, முடியில் உள்ள ஈரப்பதத்தை இயற்கையான முறையில் குறைக்க முயற்சி செய்ய வேண்டம். மழையில் நனைந்தால் தலையை துவட்ட லேசான துண்டுகளை பயன்படுத்த வேண்டும். அதற்கு பதில் ஹீட்டர் பயன்படுத்துவது முடிக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும்.


சீப்பு பயன்படுத்துவதில் கவனம்: மழையில் நனைந்தால் உடனே சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லது. இது தலையில் ஏற்படும் எண்ணெய்யை அகற்ற உதவும். அதே போல முடிக்கு அகலமான பல் கொண்ட சீப்புகளை மட்டும் பயன்படுத்தவும். முடிந்தவரை ஈரமான முடியில் சீப்பு பயன்படுத்த வேண்டாம். அதே போல முடிந்தவரை தலைமுடி நனையாமல் பார்த்து கொள்வதும் அவசியம். ஏனெனில் மழைநீரால் முடிகள் கெட்டுவிடும் என்ற அச்சம் உள்ளது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | தைராய்டு பிரச்சனை இருக்கா..... நீங்கள் செய்ய வேண்டியதும்... செய்யக்கூடாததும்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ