மது குடித்தும் ஆரோக்கியமா இருக்கணுமா... அப்போ சைட் டிஷ்ஷாக இவற்றை சாப்பிடணும்!

Health Tips In Tamil: மதுகுடிப்பதால் உடல்நலனுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். இருப்பினும் சில பேரால் குடிப்பழக்கத்தை கைவிட முடியாது. அந்த வகையில், உடலை ஓரளவு ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கும், பின்விளைவுகளை குறைப்பதற்கும் இந்த உணவுகளை சைட் டிஷ்ஷாக சாப்பிட வேண்டும். அவற்றை இதில் காணலாம். 

  • Jun 23, 2024, 14:44 PM IST

மதுகுடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மதுகுடிப்பதை ஆதரிப்பதும், ஊக்கப்படுத்துவதும் தவறானது. 

 

1 /8

அவகாடோ: இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் இருப்பதால், உடலில் மது கலப்பதற்கு நேரம் எடுக்கும். மேலும், மது குடிப்பதால் உடல் சர்க்கரை அளவில் ஏற்படும் தாக்கத்தை குறைக்கும்.   

2 /8

நட்ஸ்: முந்திரி, பாதாம் போன்ற நட்ஸ்களில் அதிகமான மேக்னீசியம், வைட்டமிண் E உள்ளது. இது மது குடிப்பதால் வரும் கல்லீரல் பாதிப்புகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.  

3 /8

தானியங்கள்: ஓட்ஸ், சிகப்பரிசி ஆகியவற்றை உண்பதன் மூலம் காம்ப்ளக்ஸ் கார்போஹைரேட் உங்களுக்கு கிடைக்கும். இதனால் மதுகுடிப்பதால் ஏற்படும் ரத்த சர்க்கரை அளவு குறையும் நிலையில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.     

4 /8

காய்கறிகள்: ஃபைபர்கள் நிறைந்த கேரட் போன்ற காய்கறிகளை மதுகுடிக்கும் போது சாப்பிடுவதால் செரிமானம் சார்ந்த பிரச்னைகளை தவிர்க்கலாம். 

5 /8

பச்சை காய்கறிகள்: கீரை போன்ற பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள். இதில் வைட்டமிண் மற்றும் கனிமங்கள், ஃபோலேட் ஆகியவை இருக்கும். இது மதுவின் கெட்ட பொருள்கள் கல்லீரலை தாக்காமல் பார்த்துக்கொள்ளும்.   

6 /8

பெரீஸ்: ப்ளூபெரீஸ், ஸ்ட்ராபெரீஸ், ராஸ்பெரீஸ் ஆகியவற்றில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கிறது. இதனை சாப்பிட்டால் மதுகுடிப்பதால் வரும் அலர்ஜிகள் தவிர்க்கப்படும்.   

7 /8

கிரீக் யோகர்ட்: இதில் அதிக புரதம் மற்றும் ப்ரோபயோடிக்ஸ் இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதன்மூலம், மது குடிப்பதன் மூலம் வரும் செரிமான பிரச்னையை தவிர்க்கலாம்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறவும். இதற்கு Zee News பொறுப்பேற்காது. மேலும், மதுகுடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மதுகுடிப்பதை ஆதரிப்பதும், ஊக்கப்படுத்துவதும் தவறானது.