நாம் வைத்திருக்கும் சில பொருட்களை நண்பர்கள், உறவினர்கள் என சிலருடன் பகிர்ந்து கொள்வது வழக்கம்.  ஆனால் நாம் பயன்படுத்தும் அழகுசாதன பொருட்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்வது நமக்கு நிச்சயம் ஆபத்தை தான் விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.  பெண்களுக்கு அழகுசாதன பொருட்கள் என்றால் அதிக விருப்பம் இருக்கும், ஒருவருக்கொருவர் வெவ்வேறு விதமான அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவார்கள்.  சில நேரம் நம்மிடம் இல்லாத ஒரு ஒப்பனை பொருளை மற்றவரிடத்தில் நாம் வாங்க நேரிடும், அவ்வாறு செய்வது கேடுவிளைவிக்கும் செயலாக கருதப்படுகிறது என்று ஆக்சிக்ளோ காஸ்மெட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் சிஇஓ மற்றும் எம்டி ரச்சித் குப்தா கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Carbohydrates: உடல் எடையை குறைக்க கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகள் உதவுமா?



கண்கள் அதிகம் உணர்திறன்கொண்ட மற்றும் நுட்பமான அம்சங்களில் ஒன்றாகும், அதே நேரத்தில் அவை நிறைய பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளன.  உதாரணமாக காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்துபவர்களுக்கு, பாக்டீரியாக்கள் லென்ஸ்களில் ஒட்டிக்கொண்டு சிக்கிக்கொள்ளும்.  இதனால் காஜல், ஐலைனர், மஸ்காரா போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டால் கண் தொற்று ஏற்படலாம்.  இதன் காரணமாக கண்களில் ஸ்டைஸ், இளஞ்சிவப்பு கண் மற்றும் பிற பாக்டீரியா தொற்றுகள் ஏற்படும்.



அதேபோல லிப்ஸ்டிக்கை பிறரிடம் பகிர்ந்துகொள்வது சுகாதாரமற்ற செயலாகும்.  இதனை பகிர்வதால்  சில வைரஸானது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் அபாயம் ஏற்படுகிறது.  இதனால் சளி மற்றும் புண் உருவாகும் அபாயம் உள்ளது. உங்கள் சருமத்திற்கு பொருந்தாத முக பூச்சுகளை பயன்படுத்துவது முகப்பருவை உண்டாக்க வழிவகுக்கும்.  அதனால் நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள் உங்கள் சருமத்திற்கு ஏற்றுக்கொள்ளும் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அதனை பயன்படுத்த வேண்டும்.  அதனால் மற்றவர்கள் பயன்படுத்தும் முகப்பூச்சுக்களை நீங்கள் பயன்படுத்தாமல் உங்கள் சருமத்திற்கு உகந்தவற்றையே பயன்படுத்தி கொள்ளுங்கள். 



மேக்கப் செய்ய பயன்படும் ப்ரஷ் மற்றும் ஸ்பான்ஜ்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.  எவ்வளவு சுத்தம் செய்தலும் அதில் சில கிருமிகள் இருக்கும், அதனால் ப்ரஷ் மற்றும் ஸ்பான்ஜ்களை சுத்தமாக வைத்திருப்பதோடு மற்றவர் பயன்படுத்திய ப்ரஷ் மற்றும் ஸ்பான்ஜ்களை பயன்படுத்தக்கூடாது. இதனால் சருமத்தில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேக்-அப் டெஸ்ட் மூலம் அதிகளவு பேக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.  அதனால் இவற்றை பலரும் பயன்படுத்துவது சுகாதாரமானதாக இருக்காது.  இந்த மேக்கப் டெஸ்டர்களை நேரடியாக முகத்திலோ அல்லது நேரடியாக விறல் மூலமாகவோ பயன்படுத்தாமல் அதனை அப்ளை செய்ய உகந்த சாதனத்தை பயன்படுத்தி முகத்தில் பூச வேண்டும்.  முகத்தில் டெஸ்ட் செய்த பின்னர் அவற்றை ஒரு பருத்தி துணியினால் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | உங்கள் நரை முடியை கருமையாக்க இதை செய்யுங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR