உடல் எடையை குறைப்பதற்கு நாமும் என்னென்னவோ டயட் இருப்போம், உடற் பயிற்சி செய்வோம். ஆனாலும் ரிசல்ட் என்னவோ சில சமயங்களில் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் போயிருக்கும். உடற்பயிற்சி மற்றும் டயட் இருப்பதற்கு பலருக்கு நேரம் இல்லாமல் இருக்கும். அவர்கள் சாப்பிட்ட பிறகு சில விஷயங்களை கடைப்பிடித்தாலே உடல் எடையை குறைக்கலாம் என சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவை என்னென்ன..? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாப்பிட்டவுடன் நடைப்பயிற்சி:


சாப்பிட்டவுடன் உட்கார்ந்து கொண்டே இருக்க கூடாது அல்லது படுக்க கூடாது என நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். அவர்கள் பலமுறை நம்மை சாப்பிட்டவுடன் நடக்குமாரும் கூறியிருப்பர். நாம் அதை கேட்காமல் சாப்பிட்டவுடன் எதையும் செய்யாமல் இருப்பவர்களில் பலர் தற்போது தொப்பையுடன் வாழ்க்கையை தள்ள வேண்டிய நிலையில் இருப்போம். 


சாப்பிட்டவுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வது நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆக உதவுவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் பல கூறுகின்றன. மேலும், இருதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் நல்ல உறக்கத்திற்கும் கூட சாப்பிட்டவுடன் நடப்பது உதவுமாம். இதனால் வேறு என்னென்ன நலன்கள் இருக்கின்றன?


சர்க்கரை அளவை குறைக்கும்:


நீங்கள் சாப்பிட்ட பிறகு, உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். சாப்பிட்ட பிறகு மேற்கொள்ளும் சிறிய நடைப்பயிற்சி மேற்கொள்வது இதை குறைக்க உதவும். சமீபத்தில் சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், மேற்கொள்ளாதவர்களை வைத்து ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில், சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக டைப் 2 சர்க்கரை நோய் இருபவர்களுக்கு சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி மேற்கொள்வது பெரிய அளவில் கை கொடுக்குமாம். 


மேலும் படிக்க | தொள தொள தொப்பை குறையணுமா? அப்போ இந்த யோகாசனம் போதும்


இருதய நோய்க்கு நல்லது:


உடலுக்கு அதிகம் அழுத்தம் தராத, அதே நேரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே உடற்பயிற்சி, நடைபயிற்சி மட்டுமே. சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி மேற்கோலவர்கள் இருதய நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இது இருதய நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. 


கொழுப்பை குறைக்கும்:


சாப்பிட்டவுடன் நடைபயிற்சி மேற்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். 150 பவுண்டு எடையுடன் உள்ள ஒருவர் 100 கலொரிகளை ஒரு மைல் தூரத்திற்கு நடப்பதால் இழப்பதாக கூறப்படுகிறது. எனவே, சாப்பிட்டவுடன் குறைவான வேகத்தில் நடப்பதால் கண்டிப்பாக கொழுப்பு குறைந்து வெயிட் லாஸ் செய்ய வழிவகுக்கும். 


உடல் எடையை குறைக்கலாம்..


பலருக்கு உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது, சாப்பிட்டவுடன் உடலுக்கு உழைப்பு கொடுக்காமல் இருப்பதுதான். மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும் என்று இதன் மூலம் பயன் அடைந்தவர்கள் கூறுகின்றனர். சாப்பிட்ட பின் நடப்பது கண்டிப்பாக உங்கள் உடலை வீண் கொழுப்பை தங்க விடாது. இது, உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை கரைக்கும், இதனால் தொப்பை விழாமல் இருக்கும். ஏற்கனவே உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்போர் சாப்பிட்டவுடன் உடலுக்கு உழைப்பு தரும் உடற்பயிற்சியை மேற்கொண்டால் கண்டிப்பாக உடல் எடையை வேகமாக குறைக்கலாம். 


மேலும் படிக்க | கத்தை கத்தையாக முடி வளர்ச்சியை பெறனுமா? இதை மட்டும் பண்ணுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ