நிதி தடுமாற்றத்தில் இருந்து தப்பிக்க? இந்த விஷயங்களைச் செய்யுங்கள்
லட்ச கணக்கில் சம்பாதித்தாலும் காசு என்னவோ கையில் தங்க மாட்டேன் எனக் கவலைபடும் பலர் கடன் வாங்கும் சந்தர்ப்பத்திற்கு ஆளாகி அதில் இருந்து வெளிவர முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பணம் புரள வேண்டுமா? பெண்கள் வீட்டின் லட்சுமி என்று கருதப்படுகிறார்கள். அவர்களை மதிக்காவிட்டால் வறுமை நீடிக்கிறது. பெண்கள், பெற்றோர் மற்றும் பெரியவர்களை மதிக்காதவர்கள் மீது தாய் லட்சுமி கோபப்படுகிறார். அத்தகைய நபர்களின் வீட்டில் நிதி நெருக்கடி எப்போதும் இருக்கும்
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்ற திருவள்ளுவ சித்தனும் கூட பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று கூறியுள்ளனர். உங்களிடம் செல்வம் இருந்தால்தான் இந்த உலகம் மதிக்கிறது.
லட்ச கணக்கில் சம்பாதித்தாலும் காசு என்னவோ கையில் தங்க மாட்டேன் எனக் கவலைபடும் பலர் கடன் வாங்கும் சந்தர்ப்பத்திற்கு ஆளாகி அதில் இருந்து வெளிவர முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
கடன் பிரச்னை அதிகமாக இருப்பவர்கள் காலை கண் விழிக்கும் போதே தங்க உலோகத்தை பார்ப்பது நன்மை தரும். அதனால்தான் அந்த காலத்தில் பெண்கள் தாலியின் முகத்தில் விழித்தார்கள்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை த்ரிதியை அன்று அன்ன தானம் செய்யுங்கள். உங்களுக்கு பணப்பிரச்சனை என்றால், உங்களால் முடிந்த அளவுக்கு யாராவது ஒருவருக்கு ஏதாவது சாப்பிட வாங்கிக்கொடுங்கள். மற்றவர்களுக்கு உணவு அளித்தால், உங்களுக்கு லட்சுமி வரவை அளிப்பார்.
அதேபோல அன்றாடம் காலையில் விலங்கு மற்றும் பறவைகளுக்கு உணவை வழங்கி வாருங்கள். உங்கள் கஷ்டங்கள் தீர்ந்து, வாழ்வில் நன்மை வரும்.
காலையில் குளித்து விட்டு பூஜை செய்யும் முன்னர் சிறிது சர்க்கரையை உங்கள் வீட்டு வாசலில் தூவுங்கள். இதனை சிறு எறும்புகள் மற்றும் பூச்சிகள் உண்ணும். அதற்கான பயனையும் உங்களுக்கு கிடைக்கும்.