ஆதார் அட்டை புதுப்பிப்பு: ஆதார் அட்டையின் (Aadhaar Card) பயன்பாடு அனைத்து இடங்களிலும் தேவையான ஒரு ஆவணமாக உள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து  சிம் கார்டு வாங்க ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே ஆதார் அட்டையை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கலாம். ஆனால் ஒரு ஆதார் கார்டிலிருந்து எத்தனை சிம்கள் அல்லது எத்தனை மொபைல் எண்கள் வாங்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள் அதைப்பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்ப்புக்கொண்டு, ஒரு ஆதார் அட்டை (Aadhaar card) மூலம் எத்தனை சிம்களை வாங்கலாம் என்ற கேள்வியை கேட்டபோது, சேவை மையம் நிர்வாகி தரப்பில் இருந்து, ஆதார் மூலம் அதிகபட்சமாக 7 சிம் அதாவது ஏழு மொபைல் எண்ணை வாங்கலாம் என்று கூறினார். 


சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரு புதிய சிம் வாங்கி அதைச் செயல்படுத்த நீண்ட காலம் ஆகும் என்பது உங்களுக்குத் தெரிந்தது. ஆனால் இப்போது ஆதார் அட்டை மூலம் சிம்மை வாங்கினால், அதே நாளில் சிம் ஆக்டிவ் ஆகிவிடுகிறது. 


ALSO READ | Aadhaar Card Update: வீட்டில் இருந்தபடியே ஆதார் அட்டையை புதுப்பிக்கலாம், விவரம் இதோ


ஆதார் அட்டையை பயன்படுத்தி நீங்கள் ஒரு புதிய சிம் வாங்கப் போகிறீர்கள். ஆனால் அந்த ஆதார் அட்டை மூலம் எத்தனை சிம்கள் வாங்கப்பட்டு உள்ள உங்களுக்குத் தெரியாது. எனவே முதலில் அதைப்பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். அதற்கான வழியைப் பற்றி உங்களுக்குச் சொல்லப் போகிறோம். உங்கள் ஆதார் எண்ணில் எத்தனை சிம்கள் வாங்கப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.


இதற்காக TAF COP நுகர்வோர் போர்ட்டலுக்கு (Consumer Portal) செல்ல வேண்டும். இது முற்றிலும் இலவச சேவை. இந்த வலைத்தளம் தொலைத் தொடர்புத் துறைக்கு (Department of Telecommunications) சொந்தமானது. உங்கள் மொபைல் எண்ணை அதில் தட்டச்சு செய்து பின்னர் OTP ஐ உள்ளிடுவதன் மூலம், ஒரு ஆதார் மூலம் எத்தனை மொபைல் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை நீங்கள் சரிபார்க்கலாம். வாருங்கள் முழுமையான செயல்முறையை தெரிந்து கொள்வோம்.


ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணை எவ்வாறு தெரிந்துக்கொள்வது:
ஆதார் அட்டையின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணைச் சரிபார்க்க, முதலில் தொலைபேசி, டேப்லெட், லேப்டாப் அல்லது கணினியில் TAF COP நுகர்வோர் போர்ட்டலை (https://tafcop.dgtelecom.gov.in/) தட்டச்சு செய்யவும். அதன் பிறகு, உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும் திரையில் நடுவில் எழுதப்பட்டிருக்கும், அதில் உங்கள் எண்ணை தட்டச்சு செய்யவும். அதன்பிறகு கோரிக்கை OTP ஐக் கிளிக் செய்யவும், அதன் பிறகு தொலைபேசியில் வரும் OTP ஐ உள்ளிடவும். இதன் பிறகு, உங்கள் ஐடியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் பற்றிய தகவல்கள் திரையில் தோன்றும். 


உங்களுக்கு திரையில் தோன்றும் தொலைபேசி எண் நீங்கள் பயன்படுத்தாவிட்டால், உங்கள் மொபைல் எண் எப்போது அகற்றப்பட்டது என்பது கூட உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் உடனடியாக புகாரளிக்கலாம். புகாரளிக்க, தொலைபேசி எண்ணுக்கு அடுத்த பெட்டியில் கிளிக் செய்யவும். அதன் பிறகு அந்த எண்ணை அறிக்கையில் கிளிக் செய்வதன் மூலம் தெரிவிக்கலாம்.


ALSO READ | EPF-Aadhaar Link: 'இந்த' தேதிக்குள் இணைக்கா விட்டால் PF பணத்தை இழக்க நேரிடலாம்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR