ஆதார் கார்ட் இருக்கா? அப்போ சுலபமா தனிநபர் கடன் பெற முடியும்: முழு விவரம் இதோ
ஆதார் அட்டையை வைத்து எப்படி லட்ச ரூபாய் கடன் வாங்க முடியும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் ஆதார் அட்டை மிகவும் பயனுள்ள மற்றும் அத்தியாவசியமான ஆவணமாகும். பல இடங்களில் நமக்கு ஆதார் அட்டை தேவைப்படுகின்றது.
ஆதார் அட்டையை வைத்து ஒருவரால் தனிநபர் கடன் பெற முடியும் என்பது பலருக்கு தெரியாது. ஆதார் அட்டையை வைத்து எப்படி லட்ச ரூபாய் கடன் வாங்க முடியும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
இந்த தனிநபர் கடனைப் பெற, உங்கள் ஆதார் அட்டையில் (Aadhaar Card) கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சரியாக இருக்க வேண்டியது கட்டாயமாகும். தகவல் சரியாக இருந்தால், அதன் மூலம் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். தனி நபர் கடன் அல்லது வங்கிகளின் பிணை அல்லது உத்தரவாதம் இதற்கு தேவைப்படாது.
ALSO READ: ஆதார் – பான் இணைப்பு தொடர்பாக மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!!
ஆதார் மூலம் கடன் வாங்குவது எப்படி
ஒவ்வொரு வங்கியும் வாடிக்கையாளருக்கு கடன் வழங்குவதற்கான தகுதிக்காக சில ஆவணங்களை கேட்கிறது. ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு (PAN Card) இதில் மிக முக்கியமானவை. இதற்குப் பிறகு KYC செயல்முறை பின்பற்றப்படும். ஆதார் அட்டை மிகவும் சரியான KYC ஆவணமாக கருதப்படுகிறது. வங்கிகளில் தனிநபர் கடனுக்கு ஆதார் அட்டை மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கடன் பெறுவதற்கான முழு செயல்முறை இதுதான்
- நீங்கள் கடன் வாங்க விரும்பும் வங்கியின் செயலி அல்லது வலைத்தளத்திற்குச் செல்லவும்.
- அதன் பிறகு வங்கியின் வலைத்தளம் அல்லது செயலியில் லாக் இன் செய்யவும்.
- வங்கியின் இணையதளத்தில், நீங்கள் கடன் பெறுவதற்கான பகுதிக்குச் செல்லுங்கள். அங்கு நீங்கள் தனிப்பட்ட கடனைக் (Personal Loan) கிளிக் செய்ய வேண்டும்
- நீங்கள் தனி நபர் கடனுக்கு தகுதியுள்ளவரா இல்லையா என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
- தகுதி உறுதிப்படுத்தப்பட்டதும், விண்ணப்பிக்கும் டேபைக் கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு விண்ணப்பம் உங்கள் முன் தோன்றும். அதில் உங்கள் பர்சனல், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பற்றிய தகவல்கள் கேட்கப்படும்.
- அனைத்தும் முடிந்த பிறகு, வங்கியாளர் தொலைபேசியில் விவரங்களைச் சரிபார்ப்பார்.
- இதற்குப் பிறகு ஆதார் அட்டையின் நகலைப் பதிவேற்றும்படி கேட்கப்படுவீர்கள்
- உங்கள் ஆதார் விவரங்களை வங்கி சரிபார்த்தவுடன், கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
- இந்த வசதியைப் பெற, நபரின் குறைந்தபட்ச வயது 23 ஆகவும் அதிகபட்ச வயது வரம்பு 60 அகாவும் இருக்க வேண்டும்.
ALSO READ: ஆதார் எண்ணை விருப்பப்படி தேர்வு செய்ய முடியுமா.. UIDAI கூறுவது என்ன..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR