Personal Loan வரம்பை அதிகரித்தது ரிசர்வ் வங்கி: யாருக்கெல்லாம் அதிக கடன் கிடைக்கும்?

வங்கிகளின் கடன் விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. இயக்குநர்களுக்கான தனிநபர் கடனின் வரம்பை ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 24, 2021, 10:27 AM IST
Personal Loan வரம்பை அதிகரித்தது ரிசர்வ் வங்கி: யாருக்கெல்லாம் அதிக கடன் கிடைக்கும்? title=

RBI New Rules: வங்கிகளின் கடன் விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. இயக்குநர்களுக்கான தனிநபர் கடனின் வரம்பை ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது (RBI New Rules For Loan). இந்த புதிய விதியின் கீழ், வங்கிகளின் இயக்குநர்கள் குழு (Board Directors) மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான கடன் வரம்பு ரூ .5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக வங்கி இயக்குனர்களுக்கு தனிப்பட்ட கடன் வரம்பு ரூ .25 லட்சமாக இருந்தது. இது பற்றி விரிவாகக் காணலாம்.

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்

ரிசர்வ் வங்கி (Reserve Bank) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வங்கிகள் தங்கள் சொந்த வங்கி அல்லது பிற வங்கிகளின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் அல்லது பிற இயக்குநர்கள் ஆகியோரின் கணவன் / மனைவி மற்றும் அவர்களை சார்ப்துள்ள குழந்தைகளைத் தவிர வேறு எந்த உறவினருக்கும் ரூ .5 கோடிக்கு மேல் கடன் வழங்க அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. 

மனைவி மற்றும் சார்புடைய குழந்தைகளைத் தவிர பிற உறவினர்கள் ஒரு கூட்டாளராகவோ, முக்கிய பங்குதாரராகவோ அல்லது இயக்குநராக இருக்கும் எந்தவொரு நிறுவனத்துக்கும் இது பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ALSO READ: ஆகஸ்ட் 1 முதல் ஊதியம், ஓய்வூதியம், EMI கட்டணத்துக்கு புதிய விதி: RBI செய்த மாற்றம் இதோ

கடன் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும் 

கடன் வாங்குபவர்களுக்கு, ரூ.25 லட்சம் அல்லது ரூ.5 கோடிக்குக் குறைவான கடன் (Personal Loan) வசதிகளுக்கான திட்டங்களை மட்டுமே அதிகாரசபை அங்கீகரிக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் அனைத்து ஆவணங்களுடனும் போர்டில் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். அதன் பிறகுதான் வங்கி போர்ட் அதைத் தீர்மானிக்கும்.

கடனுக்காக பதவியை துஷ்பிரயோகம் செய்தல்

கடன் பெற பதவியை தவறாக பயன்படுத்துவது குறித்த பல வழக்குகள் இதற்கு முன்னரே வந்துள்ளன. தற்போதைய இயக்குநர்கள் பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கடன் வழங்குவதற்கான நிலையை தவறாக பயன்படுத்தியுள்ளனர்.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI) எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தா கோச்சர் முதல் பல பெரிய நபர்கள் மீது வீடியோ கான் நிறுவனத்திற்கு 3250 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்காக தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி இப்போது இந்த விஷயத்தில் அதிக கண்டிப்பைக் காட்டி வருகிறது.

ALSO READ: RBI Employment: ரிசர்வ் வங்கியில் வேலை, ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் சம்பளம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News